| தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் ஆழியாறில் மக்கள் கோலாகலம் Dinamalar
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் ஆழியாறில் மக்கள் கோலாகலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:28

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறுக்கு, தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறில் அணைப்பகுதியுடன் கூடிய பூங்கா, குரங்கு அருவி, வண்ண மீன் அருங்காட்சியகம் உள்பட பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன.வார விடுமுறை, அரசு விடுமுறை நாட்களில், பல ஊர்களில் இருந்து, ஆழியாறுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.


இந்நிலையில், நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஆழியாறுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். கடும் வெயில் காரணமாக பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அணைப்பகுதிக்கு செல்வதை தவிர்த்தனர்.கூட்டம் குறைவால் அணைப்பகுதியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. வறட்சியால் குரங்கு அருவிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.வெயிலின் தாக்கத்தை தணிக்க, தடுப்பணை பகுதிக்கு சென்று தடை செய்யப்பட்ட பகுதியில், ஆபத்தறியாமல் சுற்றுலா பயணிகள் குளித்தனர்.அணைப்பகுதி, தடுப்பணையில் குளிப்போரால், அசம்பாவிதம் ஏற்படும் என்பதால், பொதுப்பணித்துறை, போலீசார் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X