| பெரியகுளத்தில் ஒரு எலுமிச்சை ரூ.10 Dinamalar
பெரியகுளத்தில் ஒரு எலுமிச்சை ரூ.10
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:29

பெரியகுளம்:பெரியகுளம் மார்க்கெட்டில் ரூ.2க்கு விற்ற ஒரு எலுமிச்சை பழத்தின் விலை வெயிலின் தாக்கத்தால்ரூ.10 ஆக உயர்ந்துள்ளது.


பெரியகுளம், சுற்றுப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அகமலை, ஊரடி, ஊத்துக்காடு உட்பட மலைப்பகுதிகளில் அதிகம் விளையும் எலுமிச்சை வரத்து குறைந்துள்ளது. பெரியகுளம் எலுமிச்சை கமிஷன் கடைகளில் விலை உயர்ந்துள்ளது. கோடைகாலங்களில் சர்பத், ஜூஸ் உட்பட குளிர்பானங்களில் எலுமிச்சை சேர்க்கப்படுவது அதிகம்.

ஒரு மாதத்திற்கு முன் 30 கிலோ எடை கொண்ட எலுமிச்சை மூடை ரூ.1,500க்கு விற்பனையானது.


தற்போது மூன்று மடங்கு உயர்ந்து மூடை ரூ.4,500க்கு விற்பனையாகிறது.

இதனால் மார்க்கெட்டில் ரூ.2க்கு விற்ற ஒரு பழம், நேற்று ரூ.10 க்கு விற்கப்பட்டது. மழை இல்லாததால் பழம் சிறியதாக உள்ளது.


எலுமிச்சை வியாபாரி சண்முகம் கூறுகையில்: மழை இல்லாததால் எலுமிச்சை வரத்து குறைந்துள்ளது. இதனால் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக உயர்ந்துள்ளது, என்றார்.

வேட்பாளர்களுக்கு நெல்லிக்காய்: பெரியகுளம் பகுதிகளில் ஓட்டு சேகரிக்கும் வேட்பாளர்களுக்கு, அவரது ஆதரவாளர்கள் மரியாதைக்கு கையில் எலுமிச்சை பழம் கொடுப்பது வழக்கம். எலுமிச்சை விலை மற்றும் பழத்தின் அளவு சிறியதாக உள்ளதால் விலை குறைந்த பெரிய அளவில் ரூ.1க்கு கிடைக்கும் நெல்லிக்காயை அதிகளவில் ஆதரவாளர்கள் கொடுத்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X