| அரசியல் கட்சியினர் பிரசாரத்துக்கு.இன்னும் ஒரே நாள்!..மக்களிடம் ஓட்டு சேகரிப்பு தீவிரம் Dinamalar
அரசியல் கட்சியினர் பிரசாரத்துக்கு.இன்னும் ஒரே நாள்!..மக்களிடம் ஓட்டு சேகரிப்பு தீவிரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:29

பொள்ளாச்சி:பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், நாளையுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. அதனால், இறுதி கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தல் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நிலையில், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூர சம்பவம், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களின் ஒட்டுமொத்த பார்வையையும் பொள்ளாச்சி பக்கம் திருப்பியுள்ளது.


இந்நிலையில், பொள்ளாச்சி தொகுதியை தக்க வைத்துக்கொள்ள அ.தி.மு.க., தரப்பில் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சியில் வெற்றிக் கொடியேற்ற வேண்டும் என்பதில், தி.மு.க.,வினரும் தீவிரமாக உள்ளனர்.பொள்ளாச்சியில், ஏழு முறை வெற்றி பெற்ற அ.தி.மு.க.,வினர் இந்த முறையும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இறங்கி களப்பணியாற்றி வருகின்றனர்.இந்த முறை ஆளுங்கட்சிக்கு எதிராக எழுப்பப்பட்ட பிரச்னைகளை கடந்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முதல்வர், துணை முதல்வர் பிரசாரம் செய்துள்ளனர்.எந்தெந்த பகுதிகள் பலவீனமாக உள்ளது என, கள ஆய்வு செய்து அதற்கேற்ப வியூகங்களை அமைத்து, ஓட்டு சேகரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பொள்ளாச்சியில் தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, பொறுப்பாளர்கள் நியமிக்க்பட்டு, களப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வில் இரு அமைச்சர்கள், துணை சபாநாயகர், இரு எம்.எல்.ஏ.,க்களின் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், ஒவ்வொரு பகுதியில் நிலவும் பிரச்னைகள், ஆளுங்கட்சியினர் செயல்பாடுகளை விமர்சித்து, தி.மு.க.,வினர் ஓட்டு சேகரிக்கின்றனர்.மக்கள் நீதி மையம், அ.ம.மு.க., வேட்பாளர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து, அ.தி.மு.க., - தி.மு.க.,வினரின் செயல்பாடுகளை விமர்சித்து ஓட்டு வேட்டையாடுகின்றனர்.வரும், 18 ம் தேதி ஓட்டுப்பதிவு நடப்பதால், அரசியல் கட்சிகள் கடந்த, ஒரு மாதமாக மேற்கொண்ட பிரசாரம் நாளை, 16ம் தேதி மாலையுடன் நிறைவு பெறுகிறது.


இதனையடுத்து, அரசியல் கட்சியினர் இறுதி கட்ட பிரசாரத்தில் வீடு, வீடாக சென்று ஓட்டுகளை சேகரிக்க முனைப்பு காட்டி வருகின்றனர்.கடைசி நேர பிரம்மாஸ்திரம்!இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், யாருக்கு வெற்றி என தீர்மானிக்க முடியாத சூழலில், போட்டி நிறைந்த களமாக காணப்படுகிறது. ஓட்டுகள் சிதற வாய்ப்புள்ளதால், அ.தி.மு.க., தி.மு.க., தரப்பில், கடைசி நேர பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்க முடிவெடுத்துள்ளனர். இதற்காக, ரகசியமாக வாக்காளர்களை சந்தித்து, ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை ஓட்டுகள் உள்ளது என்பதற்கேற்ப, ஓட்டுக்கு பணம் கொடுக்க துவங்கியுள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X