| மடத்துக்குளத்தில் மாதிரி ஓட்டுப்பதிவு Dinamalar
மடத்துக்குளத்தில் மாதிரி ஓட்டுப்பதிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:34

மடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகாவில் தாசில்தார் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது.லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதில், முக்கிய பகுதியாக மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. மடத்துக்குளம் அரசு மேல்நிலைபள்ளியில் வைக்கப்பட்டுள்ள, 287 ஓட்டுச்சாவடிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யும் பணியில் தேர்தல் பணியிலுள்ள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.சின்னம் மற்றும் பெயர் பொருத்தும் பணிகள் நிறைவு பெற்ற பின்பு, இதை சரிபார்க்க, மாதிரி ஓட்டுப்பதிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தாசில்தார் பழனியம்மாள் தலைமையில் நடந்த இதில், கட்சி பிரமுகர்கள் பங்கேற்று ஓட்டுப்பதிவு செய்தனர். பின், இந்த ஓட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டு பின்பு, அழிக்கப்பட்டது. தற்போது, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்த ரெடியாக உள்ளன.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X