| சேதமடைந்த ரோடு Dinamalar
சேதமடைந்த ரோடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:37

உடுமலை, ராஜேஸ்வரி நகரில் ரோடு குண்டும் குழியமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.ஆர்.பத்மநாதன், உடுமலை.


தெருநாய்கள் தொல்லை


உடுமலை, ஸ்ரீராம் நகரில், தெருநாய்கள் தொல்லை இருப்பதால், அப்பகுதி மக்கள் ரோட்டில் செல்ல அச்சமடைகின்றனர்.எம்.பாலாஜி, உடுமலை.பாதசாரிகள் அச்சம்உடுமலை, அனுசம் ரோடு பின்புறம், வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், பாதசாரிகள் அச்சத்துக்குள்ளாகின்றனர்.எஸ்.பாரதி,உடுமலை.


ஒளிர்வது இல்லை


பொள்ளாச்சி - கோட்டூர் ரோடு மேம்பாலத்தில், இரவு நேரங்களில் தெருவிளக்குகள் ஒளிருவது இல்லை. இதனால், வாகன ஓட்டுனர்களுக்கு சிரமமாக உள்ளது.ச.ஜான்சன், பொள்ளாச்சி.


குப்பை சேகரிக்கணும்


பொள்ளாச்சி நகராட்சி, மூன்றாவது வார்டு பகுதியில் துப்புரவு பணியாளர்கள் தினமும் குப்பை சேகரிக்க வருவதில்லை. குப்பை தொட்டியும் இல்லாததால் சிரமமாக உள்ளது.எஸ்.ஆறுமுகம், பொள்ளாச்சி.ஆக்கிரமிப்பால் அவதிவால்பாறை நகரில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால், மக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.வி.அமலா, வால்பாறை.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X