| தவிப்பு! லாந்தை கிராம மக்கள் : அடிப்படை வசதிகள் எங்கே Dinamalar
தவிப்பு! லாந்தை கிராம மக்கள் : அடிப்படை வசதிகள் எங்கே
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:39

ராமநாதபுரம்,:குடிநீர், மின்விளக்கு, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் தவிப்பதாக லாந்தை கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.


திருப்புல்லாணி ஊராட்சிக்குட்பட்ட லாந்தை கிராமத்தில் கண்ணந்தை, கோட்டைமேடு, பெரிய தாமரைக்குடி, சின்னதாமரைக்குடி, லாந்தை காலனி, மக்காநகர் உள்ளிட்ட எட்டு குடியிருப்புகள் உள்ளன. 500 குடும்பங்களும் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களும் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். இங்குள்ள அங்கன்வாடி மையம், ரேஷன் கடை உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளது.


இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பிரபு 38, கூறியதாவது: காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஒரு குடியிருப்புக்கு மட்டும் தண்ணீர் வாரத்திற்கு ஒருமுறை வருகிறது. மற்ற குடியிருப்புக்கு வருவதில்லை, எங்கள் குடியிருப்புகளில் 50க்கு மேற்பட்ட மின்கம்பங்கள் இருந்தும் ஒரு சில மின்கம்பங்களில் மட்டுமே விளக்குகள் எரிகிறது. இரவில் பெண்கள், குழந்தைகள் வெளியில் செல்ல சிரமமாக உள்ளது.


எங்கள் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல்களுக்கு மட்டும் ஓட்டளித்துவருகிறோம். சட்டசபை, லோக்சபா தேர்தலுக்கு கருங்குளம் கிராமத்திற்கு 3 கி.மீ., சென்று ஓட்டளிக்க வேண்டி இருக்கிறது. சுதந்திரமாக ஓட்டளிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. மேலும் லாந்தை கிராமத்தை சுற்றியிருக்கும் மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு மையத்திற்காக 150 அடி போர்வெல் அமைத்தனர். தண்ணீர் வரவில்லை இத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர்.


இந்த பகுதியில் 500 அடி அளவில் போர்வெல் அமைத்தால் தான் தண்ணீர் வரும். எங்கள் கிராமத்தில் உள்ள ரேஷன்கடை, அங்கன்வாடி கட்டடம் சேதமடைந்து காட்சியளிக்கிறது. வேட்பாளர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் பல வாக்குறுதிகளை அளிக்கின்றனர். எதையும் நிறைவேற்றுவது இல்லை என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X