| தமிழ்ப்புத்தாண்டு: ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா Dinamalar
தமிழ்ப்புத்தாண்டு: ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:40

ராமேஸ்வரம்:நேற்று தமிழ் புத்தாண்டு தினம் முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



பின் காலை 10:00 மணிக்கு கோயிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர்.


பின் கோயில் குருக்கள் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடத்தி அங்கு கூடியிருந்த பக்தருக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்ததும், பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களை நீராடினார்கள்.பின் சுவாமி, அம்மன் கோயில் ரதவீதியில் உலா வந்து மீண்டும் கோயிலுக்கு சென்றதும், பகல் 12:௦௦ மணிக்கு சுவாமி சன்னதி அருகில் கோயில் குருக்கள் உதயகுமார் பஞ்சாங்கம் வாசித்தார்.இந்நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் குமரேசன், பேஷ்கார்கள் கமலநாதன், கலைசெல்வம், கண்ணன், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X