| கார் - மொபட் மோதி விபத்து பெட்ரோல் பங்க் ஊழியர் பலி Dinamalar
கார் - மொபட் மோதி விபத்து பெட்ரோல் பங்க் ஊழியர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:42

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்த சிங்கராம்பாளையம் பிரிவில், கார் - பைக் மோதலில், பெட்ரோல் பங்க் ஊழியர் பலியானார்.கிணத்துக்கடவு அடுத்த சிங்கராம்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன், 19. கல்லாங்காட்டுப்புதுார் பெட்ரோல் பங்க்கில் பணியாற்றுகிறார். நேற்று, பகல், 11:30 மணிக்கு பெட்ரோல் பங்க்கில் இருந்து, நண்பர் கவுதமனுடன் மொபட்டில் சென்றார்.அப்போது, கோவையில் இருந்து, பொள்ளாச்சி நோக்கி வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து, முன்னாள் சென்ற மொபட்கள் மீது மோதியது.


இதில், ஒரு மொபட்டின் பின்சீட்டில் பயணித்த கவுதமன் துாக்கி வீசப்பட்டு ரோட்டோரம் விழுந்தார். மொபட் ஓட்டிய மகேந்திரன், கார் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு மொபட்டில் வந்தவர்கள் லேசான காயத்துடன் தப்பினர்.விபத்து நடந்த சப்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வருவதற்குள், கார் டிரைவர் கனகராஜ், 45, மற்றும் காரில் பயணித்த பெண்கள், சம்பவ இடத்தில் இருந்து தப்பினர்.உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, இறந்தவரையும், காயமடைந்த வாலிபரையும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கிணத்துக்கடவு போலீஸ் எஸ்.ஐ., ஜவகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X