| பழநியில் பயன்பாடில்லாத மினிகுப்பை வண்டிகள் Dinamalar
பழநியில் பயன்பாடில்லாத மினிகுப்பை வண்டிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:42

பழநி:பழநி நகராட்சி சார்பில், புதிதாக வாங்கப்பட்ட பேட்டரியில் இயங்க கூடிய மினி குப்பை வண்டிகள் பயன்பாடு இல்லாமல் அலுவலக வளாகத்தில் உள்ளது.துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பழநி நகராட்சிக்கு பேட்டரியில் இயங்க கூடிய மினி குப்பை வண்டிகள் ரூ.பல லட்சம் செலவில் வாங்கப்பட்டது. இதன் மூலம் குப்பையை உடனடியாக அகற்ற வழிவகை ஏற்பட்டது. இந்நிலையில் பேட்டரியில் சரியாக சார்ஜ் நிற்கவில்லை எனவும், அடிக்கடி பழுதாகி விடுவதாக துப்புரவுப்பணியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.சிலர் புதிய மினி குப்பை வண்டியை பயன்படுத்தாமல் பழைய தள்ளுவண்டிகளை பயன்படுத்துகின்றனர்.நகராட்சி அலுவலக வளாகத்தில் பயன்பாடு இல்லாமல் வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.துாய்மை இந்தியா திட்டத்தில் ரூ. பல லட்சம் செலவில் வாங்கிய குப்பை வண்டிகளை எவ்வாறு பயன்படுத்துவது என துப்புரவுப்பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து, அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து, பழுது இருந்தால் சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.நகராட்சி கமிஷனர் நாராயணன் கூறுகையில், பேட்டரி குப்பை வண்டிகளை இயக்குவது தொடர்பாக பயிற்சி வழங்கியும், சரியான புரிதல் இல்லாதவர்கள் நிறுத்தியுள்ளனர். அவர்களுக்கு தெளிவாக பயிற்சி அளிக்கப்படும். புதிய வாகனங்கள் பழுது உள்ளது என யாரும் புகார் தெரிவிக்கவில்லை'' என்றார்.--

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X