| ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில்குறைந்த கட்டணம் இருட்டடிப்பு Dinamalar
ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில்குறைந்த கட்டணம் இருட்டடிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:43

பக்தர்கள் பாதிப்பு
பழநி:பழநி முருகன் கோயில் ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில் குறைந்த விலை (ரூ.15, ரூ.10) டிக்கெட்கள் பெயரளவில் வழங்குவதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.பழநி முருகன் கோயில் மலைக்கு மூன்று நிமிடங்களில் எளிதாக செல்லும் வகையில் ரோப்கார் காலை 7:15 மணி முதல் இரவு 8:30 மணி வரை இயக்கப்படுகிறது. இதில் செல்வதற்கு ஒரு நபருக்கு குறைந்த கட்டணமாக ரூ.15, சிறப்புவழி கட்டணமாக ரூ.50ம் வசூலிக்கின்றனர். இதேபோல மலைக்கோயிலுக்கு 8 நிமிடங்களில் செல்லும் வகையில் காலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மூன்று வின்ச் கள் இயக்கப்படுகின்றன.இதில் ஒருநபருக்கு ரூ.10ம், சிறப்புவழி கட்டணமாக ரூ.50ம், மேல் இருந்து கீழே வருவதற்கு சிறப்புவழி கட்டணமாக ரூ.25ம் வசூலிக்கின்றனர்.


கடந்த சிலநாட்களாக ரோப்கார், வின்ச் ஸ்டேசன்களில் பெயரளவிற்கே ரூ.15, ரூ.10 டிக்கெட் வழங்கப்படுவதாகவும், பெரும்பாலும் ரூ.50 டிக்கெட் மட்டுமே விற்பனை செய்வதாகவும் பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் ரோப்கார், வின்ச் மூலம் செல்ல விரும்பும் ஏழை, நடுத்தர பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.ஆண்டுக்கு ரூ.பலகோடி வருவாய் உள்ள கோயில் நிர்வாகம், வின்ச், ரோப்கார் ஸ்டேசன்களில் குறைந்த விலை ரூ.10, ரூ.15 டிக்கெட்களை விரும்புவோருக்கு வழங்க வேண்டும். இணை ஆணையர் செல்வராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X