குருத்தோலை ஊர்வலங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:45

பரமக்குடி:பரமக்குடி புனித அலங்காரமாதா சர்ச்சில் குருத்தோலைஞாயிறு விழா நடந்தது. முன்னதாக ஐந்துமுனை ரோடு அருகில் இருந்து ஏராளமானவர்கள் கையில் குருத்தோலைகளுடன் ஊர்வலமாக வந்தனர்.

ஊர்வலம் சர்ச்சை அடைந்து, அங்கு பங்குத்தந்தை செபஸ்தியான் தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் சூசைமைக்கேல், லியோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் சர்ச் வளாகத்தில் உள்ள பள்ளியில் ரத்ததான நிகழ்ச்சி நடந்தது. விழாவில் பங்குப்பேரவை செயலாளர் ஜோசப், பொருளாளர் ஜேம்ஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


திருவாடானை: தொண்டி அருகே காரங்காடு புனித செங்கோல் மாதா ஆலயத்தில் குருத்தோலை ஊர்வலம் நடந்தது. ஏராளமானோர் குருத்தோலை ஏந்தி சென்றனர். முன்னதாக பாதிரியார் சாமிநாதன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. விழாவை முன்னிட்டு ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது.


சாயல்குடி: சாயல்குடி வி.வி.ஆர்., நகரில் ஒன்றுகூடிய ஏராளமான கிறிஸ்தவர்கள்கைகளில் குறுத்தோலையை ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர்.சாயல்குடி புனித ஆரோக்கிய மாதா சர்ச் வரை ஊர்வலமாக வந்தனர்.பங்குத்தந்தை சார்லஸ் கென்னடி குருத்தோலைகளில் புனிதநீர் தெளித்துஅர்ச்சிப்பு செய்தார். சர்ச்சில் மறையுரை மற்றும் ஆசியுரை வழங்கப்பட்டது. ஜெபவழிபாட்டிற்கு பின்னர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. சர்ச் பங்கு இறைமக்கள், பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


* கீழக்கரையில் உள்ள சி.எஸ்.ஐ., துாய பேதுரு சர்ச்சில் இருந்து நகர் பகுதிகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள்கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி கீர்த்தனைப்பாடல்களை பாடியவாறும், புனித வசனங்களை வாசித்தபடி ஊர்வலமாக வந்தனர்.பாதிரியார் விஜயக்குமார் சிறப்பு ஆராதனைகளை நடத்தினார்.


* முத்துப்பேட்டை புனித காணிக்கை அன்னை சர்ச்சில்குருத்தோலை பவனியில் ஏராளமானோர் பங்கேற்று இயேசுவின் துதிப்பாடல்களை பாடியவாறு ஊர்வலமாக சென்றனர்.சர்ச்சில் சிறப்பு திருப்பலியும், மறையுரையும் நிறைவேற்றப்பட்டது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X