| தயார்!தேர்தலுக்கு தேவையான பொருட்கள்..மும்முரமாக ஈடுபட்டுள்ள தேர்தல் பிரிவினர் Dinamalar
தயார்!தேர்தலுக்கு தேவையான பொருட்கள்..மும்முரமாக ஈடுபட்டுள்ள தேர்தல் பிரிவினர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:45

திண்டுக்கல்:திண்டுக்கல் லோக்சபா தேர்தலுக்கு தேவையான பொருட்களை தயார் செய்யும் பணியில் தேர்தல் பிரிவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, ஏப்18-ம் தேதி, காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது.


வேட்பாளர்களின் பிரசாரம் நாளை (16-ம் தேதி) மாலை 6:00 மணிக்கு ஓய்கிறது. தற்போது ஓட்டுப்பதிவுக்கு தேவையான பொருட்களை தயார் படுத்தும் பணியில், தேர்தல் அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, வேட்பாளர் பெயர், சின்னம் மற்றும் போட்டோவுடன் கூடிய 'பேலட் சீட்' பொருத்தி சட்டசபை வாரியாக தயாராக வைக்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடியில் பயன்படுத்தும் 198 வகையான பொருட்கள் மாவட்ட தேர்தல் பிரிவில் இருந்து சாக்கு மூட்டைகளில் அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.திண்டுக்கல் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி வாரியாக பொருட்கள் பிரித்து வைக்கும் பணி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது. படிவங்கள், காகித உறை, வாக்காளர் பட்டியல், மின்னணு இயந்திரம், வி.வி.பாட் , இங்க் குப்பி, 'சீல்', தீப்பெட்டி, ரப்பர் பாண்ட், சைன் போர்ட், பென்சில், பிளேடு, நுால், ஸ்கேல், துணி, மெழுகு, முனை பேனா, ஓட்டுப்பதிவு அறை அமைப்பதற்கான 'வினய் பிளாஸ்டிக் ஷீட்' உள்ளிட்ட பல்வகையான பொருட்கள் இடம் பெற்றுள்ளன.


தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும்போது, '' தேர்தலுக்கு முந்தைய நாளான ஏப்.17-ம் தேதி மின்னணு இயந்திரங்கள், தேர்தல் பொருட்கள் மண்டல அலுவலர் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஓட்டுச்சாவடி அலுவலர் வசம் ஒப்படைக்கப்படும்.ஓட்டுப்பதிவு முடிந்ததும், கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஓட்டுப்பதிவு இயந்திரம் சீல் வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை நடக்கும் ரெட்டியார்சத்திரம் திண்டுக்கல் அண்ணா பல்கலைக்குட்பட்ட பல்கலை பொறியியல் கல்லுாரிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு 'ஸ்ட்ராங் ரூமில்' சீல் வைத்தபின், 34 நாட்கள் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பில் இருக்கும். உபரி பொருட்கள் மாவட்ட தேர்தல் பிரிவுக்கு திருப்பி அனுப்பப்படும், என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X