திருச்சுழியில் தயார் நிலையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:46

ராமநாதபுரம்:ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருச்சுழி சட்டசபை தொகுதியில் தேர்தல் ஓட்டுப்பதிவிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் ஒட்டப்பட்டு தயார் நிலையில் இருப்பதை மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார்.


பின் அவர் தெரிவித்ததாவது: ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்குட்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்துார், திருவாடானை ஆகிய 4 சட்டசபை தொகுதிகளும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி சட்டசபை தொகுதி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி சட்டசபை தொகுதி, என மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேர்தல் ஓட்டுப்பதிவிற்காக மொத்தம் 1,916 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


அவற்றில் திருச்சுழி சட்டசபை தொகுதியில் மட்டும் 273 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. 23 வேட்பாளர்கள் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடுகின்றனர். அதனடிப்படையில் ஒவ்வொரு ஓட்டுச்சாவடி மையத்திலும் 2 ஓட்டளிக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.


அதன்படி 6 சட்டசபை தொகுதிகளுக்கு மொத்தம் 4,577 ஓட்டளிக்கும் கருவிகளும், 2,299 ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 2,499 ஓட்டு போடுவதை சரிபார்க்ககூடிய இயந்திரங் களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சூழி சட்ட சபை தொகுதிக்கு 627 ஓட்டளிக்கும் கருவிகளும், 343 ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 375 ஓட்டு போடுவதை சரிபார்க்ககூடிய இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இந்த மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் நிறைவேற்றப்பட்டு எச்.என்.கே.வி., சாலா தொடக்க பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. என்றார். திருச்சுழி உதவி தேர்தல் அலுவலர் கார்த்திகை செல்வி, தாசில்தார் பாண்டி சங்கர் ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X