| பந்தல் காய்கறி விலை அதிகரிப்பு: விவசாயிகளுக்கு மகிழ்ச்சி Dinamalar
பந்தல் காய்கறி விலை அதிகரிப்பு: விவசாயிகளுக்கு மகிழ்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:52

சோமனுார்:கருமத்தம்பட்டி பேரூரட்சிக்கு உட்பட்ட பகுதியில், புடலைங்காய், சுரைக்காய், பாகற்காய் போன்ற நீர் சத்துள்ள காய்கள் அதிகம் பயிரிடப்படுகின்றன.கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிகளவில் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் தோட்டப்பயிர்களுக்கு நிலத்தடி நீர் பாசனத்தை நம்பியே உள்ளனர். அதனால், காய்கறி விளைச்சலில் எதிர் பார்த்த மகசூல் கிடைக்கவில்லை. சந்தையில் காய்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என, விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.


இந்த நிலையில், கருமத்தம்பட்டி பகுதியில் போர்வெல் பாசனம் மூலம், பீர்க்கன், புடலை மற்றும் பாகற்காய் நல்ல விளைச்சல் கண்டுள்ளது. கருமத்தம்பட்டியை சேர்ந்த காய்கறி விவசாயி அருண், மூன்று ஏக்கர் பரப்பளவில் புடலை, பீர்க்கை, சுரைக்காய் மற்றும் பாகற்காய் பயிரிட்டுள்ளார்.அவர் கூறுகையில், 'புடலை, பீர்க்கை போன்ற நீர் காய்களை பொறுத்தவரை, 40 நாட்களில் சாகுபடி தொடங்கும். நான்கு மாதங்களுக்கு காய்கள் பறிக்களாம். இப்போது காய் விலை பாரவாயில்லை. பாகற்காய் தோட்ட விலையாக கிலோவுக்கு, 24 ரூபாய் கிடைக்கிறது. அதே போல் புடலை, பீர்க்கை மற்றும் சுரைக்காய்க்கு கிலோவுக்கு, 20 ரூபாய் வரை கிடைக்கிறது' என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X