கடும் வறட்சியில் உதவியது 2ம் தவணை தொகை: சிறு, குறு விவசாயிகள் மகிழ்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:53

அன்னுார்:அன்னுார் வட்டாரத்தில், விவசாயிகளுக்கு மத்திய அரசின், இரண்டாம் தவணை உதவி தொகை வந்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நாட்டில், வறட்சி, உரம், பூச்சி மருந்து விலையுயர்வு ஆகியவற்றால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விளைபொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை கிடைப்பதில்லை. இதனால் பல லட்சம் விவசாயிகள் தங்கள் நிலங்களை தரிசாக விட்டு வைத்துள்ளனர்.


இந்நிலையில், கடந்த பிப்ரவரியில், மத்திய அரசு, சிறு, குறு விவசாயிகளுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்தது. ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கப்படும். இந்த தொகை மூன்று தவணைகளாக தலா, 2,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது.இத்திட்டத்தின்படி, ஐந்து ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ள விவசாயிகள் உதவி தொகை பெற தகுதியானவர்கள். அவர்கள் குடும்பத்தில் அரசு ஊழியர் இருக்கக்கூடாது.


வருமான வரி செலுத்துவோராக இருக்கக்கூடாது. உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகிக்கக்கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.அன்னுார் தாலுகாவில், 8,278 சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து அன்னுார் வட்டாரத்தில், 6,000க்கு மேற்பட்ட விவசாயிகள் விண்ணப்பித்தனர். அதில், தகுதியுடைய, 5,426 விண்ணப்பங்கள் தகுதியானவை என தேர்ந்தெடுக்கப்பட்டன. அவர்களுக்கு முதல் தவணை தொகையான, 2,000 ரூபாய் அவர்களுடைய வங்கி கணக்கில் பிப். கடைசி வாரத்தில் செலுத்தப்பட்டது.


இந்நிலையில், இரண்டே மாதத்தில், இரண்டாவது தவணை தொகையான, 2,000 ரூபாய், விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அன்னுார் வட்டாரத்தில், கடந்த, 9ம் தேதி முதல், 2,000க்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு இரண்டாம் கட்ட உதவி தொகை வந்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், மத்திய அரசின் இந்த தொகை உதவியாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X