| தேவகோட்டையில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு துவங்கியாச்சு தண்ணீருக்கு தட்டுப்பாடு Dinamalar
தேவகோட்டையில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு துவங்கியாச்சு தண்ணீருக்கு தட்டுப்பாடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:53

தேவகோட்டை:தேவகோட்டையில் நிலத்தடி நீர் தாராளமாக இருப்பதாகவும், 30 வருடங்களுக்கு பஞ்சமில்லை என நில நீர் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.80 முதல் 100 அடியில் தாராளமாக தண்ணீர் கிடைத்தது. இதன் காரணமாக வீட்டு உரிமையாளர்கள் 200 முதல் 240 அடி வரைஆழ்துளை கிணறு அமைத்து 160 அடிவரை குழாய் அமைத்தனர்.


10 வருடங்களாக இந்த நிலைமை தான் இருந்தது. குறைந்த அழுத்த மின்சாரத்தால் தான் குடிநீர் பிரச்னை வருமே தவிர தேவகோட்டையை பொறுத்தவரை தண்ணீர் பிரச்னை இல்லாமல் இருந்தது. சில ஆண்டுகளாக போதியமழை இல்லை. குறிப்பாக கடந்தஇரு ஆண்டுகளாக மழை பொய்த்து போனதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. பெய்த மழைநீரையும் சேமித்து வைக்க,நிலத்தடி நீரை அதிகரிக்க நகராட்சியினர் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை.


மழைநீர் சேமிப்பு கட்டாயம் என்று இருந்ததை தளர்த்தினர்.இப்போது மீண்டும் மழைநீர் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது போன்ற பல காரணங்களால் நிலத்தடி நீர் மட்டம் 20 அடி முதல் 30 அடிவரை குறைந்து விட்டது. ஏற்கனவே ஆழ்துளை கிணறு அமைத்தவர்கள் தண்ணீர் இழுவை சக்தி குறைந்துவிட்டது. இதன் காரணமாக தேவகோட்டையின் பல பகுதிகளிலும் வீட்டு உரிமையாளர் பழைய ஆழ்துளை கிணற்றை நிறுத்திவிட்டு 300 அடி முதல் 320 அடி வரை கிணறு அமைத்த 260 அடிக்கு குழாய்களை அமைத்து வருகின்றனர்.


நகராட்சியின் ஆழ்துளை கிணறுகளில் சிலவற்றில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் செயல்படாமல் .உள்ளது. அதனை நகராட்சி அருகில் கூடுதல் ஆழத்திற்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X