பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை, அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது.கல்லுாரி மாணவர் சங்க தலைவர் பிரதீப் ராஜ்குமார் வரவேற்றார். ஆண்டறிக்கையை கல்லுாரி முதல்வர் பொன்னுசாமி வாசித்தார். கல்லுாரி செயலாளர் சுவாமி நிர்மலேஷானந்தர் தலைமை வகித்தார். சுவாமி ஞானபூர்ணானந்தர் ஆசியுரை வழங்கினார். சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில், கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.கல்லுாரி மலர் வெளியிடப்பட்டது. விழாவையொட்டி, கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கண்ணப்ப நாயனார் நாடகம் ஆகியன நடந்தன. மாணவர் சங்க செயலாளர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.