| வேடசந்துார் ஆத்துமேடு நடுரோட்டில் பொதுக்கூட்டம்: தேவை மாற்று ஏற்பாடு Dinamalar
வேடசந்துார் ஆத்துமேடு நடுரோட்டில் பொதுக்கூட்டம்: தேவை மாற்று ஏற்பாடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:57

வேடசந்துார்:வேடசந்துார் ஆத்துமேட்டில், அடிக்கடி பொது கூட்டங்கள் நடப்பதால், போதிய இடவசதி இல்லாத நிலையில், மக்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.வேடசந்துார் தாலுகா தலைநகர் என்பதால், இங்கு அடிக்கடி பொதுக்கூட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடக்கின்றன. சமீப காலமாக பஸ் ஸ்டாண்ட் முன்புறம், பாலம் அருகே அல்லது ஆத்துமேடு என மூன்று இடங்களில் கூட்டங்கள் நடைபெறுகின்றன. பஸ் ஸ்டாண்ட் அருகே கோர்ட் தடை உள்ளதாக போலீசார் கூறினாலும், தொடர்ந்து இங்கு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.இது மட்டுமின்றி, தற்போது லோக்சபா தேர்தல் நேரம் என்பதால் ஆத்துமேட்டில் உள்ள நாடக மேடையில் தான் அதிக பொது கூட்டங்கள் நடக்கின்றன.


ஒவ்வொரு கூட்டணி கட்சியும் தங்களது கூட்டத்திற்கு கூடுதலான கூட்டத்தை கூட்டி காட்டவேண்டும் என ஆர்வம் காட்டுவதால், வேடசந்துார் ஆத்துமேடு பகுதி மக்கள் வெள்ளத்தால் நிரம்புகிறது. இங்கிருந்து (நால்ரோடு), திண்டுக்கல், கரூர், ஒட்டன்சத்திரம், வடமதுரை செல்லும் எந்த வாகனமும் செல்ல முடியால் நிறுத்தப்படுகின்றன. சில நேரங்களில் பைபாஸ் ரோட்டிலேயே வாகனங்களை திருப்பி விடுகின்றனர்.இதற்கு தீர்வு காண நாடகமேடை அருகேயுள்ள கொடி கம்பங்கள், கல்வெட்டுகள், சிறிய தடுப்புகளை அகற்றிவிட்டு சற்று மேற்கே இவற்றை அமைக்கலாம். மேலும் நாடக மேடைக்கு மேற்கு பகுதியில் உள்ள பட்டுபபோன புளியமரம், அங்குள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றினால் அந்த பகுதி திறந்தவெளியாக காட்சியளிக்கும். எனவே,போதிய இடவசதி ஏற்படுத்த பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X