அன்னுார்:சிறுவர், சிறுமியருக்கான யோகா பயிற்சி அன்னுாரில் இன்று துவங்குகிறது.அன்னுார், தென்னம்பாளையம் ரோட்டில், வாழும் கலை பயிற்சி மையம் உள்ளது. இங்கு, எட்டு முதல் 13 வயது வரையிலான, சிறுவர், சிறுமியருக்கு யோகா மற்றும் எளிய மூச்சு பயிற்சி இன்று துவங்குகிறது.வரும், 18ம் தேதி வரை தினமும் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, பயிற்சி நடக்கிறது. இப்பயிற்சியை குருஜி ரவிசங்கர் வடிவமைத்துள்ளார்.இதில், பங்கேற்பதன் மூலம் நினைவாற்றல், தன்னம்பிக்கை அதிகரிக்கும். இரக்க குணம், நட்புணர்வு, பகிர்வுதன்மை வலுப்படும். 'மேலும் விபரங்களுக்கு, 93603 46205 என்னும் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என, மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.