சூலுார்:சுல்தான்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட செஞ்சேரி பிரிவில், ஜி.எஸ்.டி., கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, வாகன சோதனை நடத்தினர்.அப்போது திருப்பூரில் இருந்து சமேஷ், 35, என்பவர் ஓட்டி வந்த டவேரா காரை சோதனை செய்தனர். அதில், மக்கள் நீதி மையம் என எழுதப்பட்ட, 252 டீ சர்ட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து சூலுார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.