| வாகன சோதனையில் 28.5 பவுன் தங்க நகைகள் பறிமுதல் Dinamalar
வாகன சோதனையில் 28.5 பவுன் தங்க நகைகள் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:59

மேட்டுப்பாளையம்:சிறுமுகை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும்படையினர், உரிய ஆவணங்கள் இல்லாத, 28.5 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பறக்கும்படை அதிகாரி சந்திரகலா, சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் குழுவினர், சிறுமுகை - சத்தி மெயின் ரோட்டில் ஆலாங்கொம்பு தண்ணீர் தடம் கார்ப்பரேஷன் வங்கி அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த, ஆலாங்கொம்பு வீராசாமி நகரை சேர்ந்த செல்வக்குமாரை மடக்கி சோதனை செய்தனர். அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி, 28.5 சவரன் தங்க நகைகள் இருந்தன.பறக்கும்படை அதிகாரிகள் நகைகளை பறிமுதல் செய்து, மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X