| புத்தாண்டில் ஊர் கூடி உழவுப்பணி Dinamalar
புத்தாண்டில் ஊர் கூடி உழவுப்பணி
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
06:02

திருப்புவனம்:திருப்புவனம் வட்டாரத்தில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விவசாயிகள் பாரம்பரிய உழவு பணிகளில் ஈடுபட்டனர்.திருப்புவனம் வட்டாரத்தில் நெல்,வாழை, கரும்பு, தென்னனை அதிகளவு பயிரிடப்படுகிறது.


கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழையில்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் பம்ப் செட் கிணறுகளும் வறண்டு விட்டன. வருடம் தோறும் ஆடி, சித்திரை மாதங்களில் விவசாயிகள் உழவு பணிகளை மேற்கொள்வது வழக்கம்.


வறட்சி நிலவினாலும் பாரம்பரிய பழக்கத்தை கை விடாமல் நேற்று திருப்புவனம் அருகே ஓடாத்துார், தச்சனேந்தல் கிராம விவசாயிகள் உழவு மாடு பூட்டி ஏர் உழவு செய்தனர். அதிகாலையில் வயலில் உழவு மாடுகளுக்கு பூஜை செய்து மாலை அணிவித்து உழவு பணிகளை தொடங்கினர் .


விவசாயிகள் கூறுகையில்,' வருடப்பிறப்பன்று மழை பெய்வது வழக்கம் .இந்த கோடை மழையை நம்பி குறுகிய கால நெல்,கடலை,எள் போன்றவை ேநரடி விதைப்பின் மூலம் விதைக்கப்படும், இந்தாண்டு மழை இல்லை என்றாலும் பழக்கத்தை மாற்றாமல் உழவு செய்து வருகிறோம்,' என்றனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X