சிங்கம்புணரி, திருப்புத்துாரில் சித்திரை பால்குடம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
06:12

திருப்புத்துார்:திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் முருகனுக்கு பக்தர்கள் சித்திரை பால்குடம் எடுத்தனர்.


குன்றக்குடி ஆதினம் ஐந்து கோயில் தேவஸ்தானத்திற்குட்பட்ட சிவகாமி அம்மன் உடனாய திருத்தளிநாதர் கோயிலில் வடக்கு நோக்கி முருகன் எழுந்தருளியுள்ளார். சித்திரை பால்குட விழாவை முன்னிட்டு ஏப்.9ல் முருக பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் துவங்கினர்.நேற்று சித்திரைப் பிறப்பை முன்னிட்டு காலை எல்கை தெய்வமான கோட்டைக் கருப்பண்ண சுவாமி கோயிலிலிருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக திருத்தளிநாதர் கோயில் வந்தனர்.


தொடர்ந்து முருகனுக்கு பாலாபிேஷகம்,சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏற்பாட்டினை திருமுருகன் திருப்பேரவையினர் செய்தனர்.


என். வைரவன்பட்டிதிருப்புத்துார் அருகே நகர வைரவன்பட்டி வளரொளிநாதர் வயிரவர் கோயிலில் சித்திரைப் பிறப்பை முன்னிட்டு சித்திரைக் கனி விழா நடந்தது.சித்திரை மாதத்தின் முதல் நாளில்இரவும் பகலும் ஒரே அளவு நேரமாக இருக்கும்.


அத்தருணத்தில் சித்திரைக்கனியை கோயிலில் காண்பதால் அந்த வருடம் முழுவதும் நம் வாழ்வில் ஐஸ்வர்யம் நல்கும் என்பது ஐதீகம். இதனை முன்னிட்டு நேற்று கோயில்நடை அதிகாலை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.


தொடர்ந்து மார்த்தாண்ட பைரவர் சன்னதியில் மூலவருக்கு எதிரே கண்ணாடி வைக்கப்பட்டு அதில் தெரியும் பைரவருக்கு முன் 50 க்கும் மேற்பட்ட பழங்கள் வைக்கப்பட்டன. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. உற்ஸவ பைரவர் பிரகார வலம் வந்தார்.மாலையில் விஹாரி தமிழ் வருட பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. ஏற்பாட்டினை சி.டி.எஸ்.சிதம்பரம், எஸ்.எல்.எஸ்.பழனியப்பன், ஏ.எல்.எம்.லெட்சுமணன் மற்றும் வைரவன்கோயில் நகரத்தார் சங்கத்தினர் செய்தனர்.


சிங்கம்புணரி


சிங்கம்புணரியில் தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று பால்குட விழா நடந்தது.ஓம் சேவுகா ஐயப்பா யாத்திரை குழு மற்றும் கிராமத்தார்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ., ராம. அருணகிரி தலைமை வகித்தார்.


ஐயப்ப குருசாமிகள் முன்னிலை வகித்தனர்.சந்திவீரன் கூடத்திலிருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் பெரிய கடைவீதி, காரைக்குடி சாலை வழியாக சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலை அடைந்தது. அங்கு மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.


தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பூரணை புட்கலை சமேத சேவுகப்பெருமாள் அய்யனார் காட்சி அளித்தார். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இவ் விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X