| இறகுசேரி கலவரம்:11 பேர் மீது வழக்கு Dinamalar
இறகுசேரி கலவரம்:11 பேர் மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
06:16

தேவகோட்டை:தேவகோட்டை இறகுசேரி பகுதியில் கடந்த 9ம் தேதி இரவு கண்மாய்க் கரையில் டார்ச்லைட் அடித்ததில் தகராறு ஏற்பட்டது.


பாலசமுத்திரத்தை சேர்ந்த அன்னமுத்துவை 38, மற்றொரு பிரிவைச் சேர்ந்த கண்ணதாசன், காளீஸ்வரன், செல்வம் தாக்கியதில் அன்னமுத்து சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது பற்றி சுதாகர் கொடுத்த புகாரின் பேரில் மூவரையும் போலீசார் கைது செய்தனர். மறுநாள் காலை இறகுசேரியில் வடகரையில் சிவயோகம் பெட்டிக்கடையை திறந்து வைத்திருந்தார். அப்போது அங்குவந்த அன்னமுத்து தரப்பினர் கடையை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி சிவயோகத்தை தாக்க முயன்றுள்ளனர்.


அந்த கும்பல் இறகுசேரி எல்லையில் உ.ள்ள குமார் வீட்டிற்கு வந்தது. அத்துமீறி வீட்டிற்குள் நுழைய முயன்ற கும்பலை தோட்ட வேலை செய்தவர்கள் தடுத்தனர். அவர்களை கும்பல் தாக்கியது. தடுக்க போன குமாரின் தாயார் கமலத்தையும் ஆயுதங்களால் தாக்க முயன்றனர். மகனை கொல்லாமல் விடமாட்டோம் என்றவாறே வீட்டிற்குள் செல்லமுயன்றவர்களை விடாமல் தடுத்தனர்.


ஆத்திரப்பட்ட கும்பல் வீட்டில் கல்வீசி கண்ணாடிகளை உடைத்தனர். போலீசார் விசாரித்து வந்தனர். குமாரின் தாயார் கமலம் இறகுசேரி கலவரம் தொடர்பாக போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் புதிய தமிழகம் கட்சி பொறுப்பாளர் கஜேந்திரன், பிரதீப், ,ராஜிவ்காந்தி, பாலசுப்பிரமணியன், பாண்டி, மதன், மனோகர், புவனேஸ்வரி, சிங்காரி, சதீஸ், சத்தியராஜ் ஆகிய 11 பேர் மீது வழக்குபதிவு தேடிவருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X