பாளம், பாளமாக வெடித்து இருக்கும் குளம்... கலங்குது உள்ளம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
06:27

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. சுற்றுவட்டாரத்தில் உள்ள குளங்களில் தண்ணீர் வற்றி வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. குளத்து நீரை நம்பி பயிர் செய்துள்ள விவசாயிகள், சாகுபடி பாதித்துள்ளதால் வருத்தமடைந்துள்ளனர்.மேட்டுப்பாளையம் தாலுகாவில் பெள்ளாதியில், 100 ஏக்கர் பரப்பளவில் ஒரு குளமும், வெள்ளியங்காட்டில், 152 ஏக்கர் பரப்பில் ஒரு குளமும் உள்ளது.


மழை காலத்தில் கட்டாஞ்சி மலை பகுதிகள், மருதுார், திம்மம்பாளையம், காரமடை மற்றும் ஏழு எருமை பள்ளத்தில் வரும் மழை நீர் பெள்ளாதி குளத்துக்கு வரும்.இதில், வாய்க்கால் பாசனம் ஏதுமில்லாததால், குளத்தில் தண்ணீர் நிறைந்திருக்கும் போது, ஐந்து கி.மீ., சுற்றளவில் உள்ள விவசாய கிணறுகள், போர்வெல்களுக்கு நீர் ஊற்று கிடைக்கும். இதனால் இப்பகுதியில் விவசாயம் செழிப்புடன் காணப்படும்.


வெள்ளியங்காடு குளம் பெரிய அளவில் உள்ளதால், வெள்ளியங்காடு, சின்னக்கண்டியூர், பெரிய கண்டியூர், சாலைவேம்பு, மாந்தரைக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கருக்கு பாசன வசதிகள் கிடைக்கும் வகையில், வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன.இக்குளத்துக்கு பில்லுார் அணை செல்லும் வழியில் உள்ள அன்சூர் மலைப் பகுதிகளில் பெய்யும் மழை நீர் மட்டுமே வரும். அதனால் இக்குளம் எப்போதும் வறண்டு காணப்படும்.


இந்நிலையில் கோவை மாநகராட்சிக்கு பில்லுார் அணையிலிருந்து இரண்டாவது குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டது. இத்திட்டத்தின் சுத்திகரிப்பு நிலையம் வெள்ளியங்காட்டில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையத்தில் தண்ணீரை சுத்தம் செய்த பிறகு வெளியேற்றப்படும் கழிவுநீரை, வெள்ளியங்காடு குளத்தில் விடும்படி விவசாயிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்தனர்.அதன் பேரில் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குழாய் மூலம் குளத்துக்கு கழிவுநீர் தொடர்ச்சியாக விடப்படுகிறது. இதனால்,கடந்த மூன்று ஆண்டுகளாக வெள்ளியங்காடு குளம் நிரம்பி இருந்ததால், சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்தது. விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.இந்நிலையில் பில்லுார் அணையில் தேங்கி நிற்கும் தண்ணீரை, குடிநீர் திட்டத்துக்கு சுத்தமான தண்ணீர் மட்டும் எடுக்கப்படுகிறது.


இதனால் சுத்திகரிப்பு நிலையத்தில் போதிய கழிவுநீர் இல்லாததால், வெள்ளியங்காடு குளத்துக்கு நீர் வரத்து குறைந்தது.மேட்டுப்பாளையம் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் குளத்தில் உள்ள தண்ணீர் வற்றத் தொடங்கியது. கடந்த நான்கு ஆண்டுகளாக, 100 ஏக்கர் நிலப்பரப்பில் தண்ணீர் தேங்கி நின்றிருந்த நிலையில், தற்போது சிறிதளவு மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது.இதனால் குளம் காய்ந்து வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதே நிலை நீடித்தால் குளத்தில் உள்ள தண்ணீர் முற்றிலும் வற்றி, வறண்டுவிடும். இதனால், இக்குளத்தின் தண்ணீரை நம்பி பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X