| தேருக்காக அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் இதே நிலை நீடிக்கும் எதிர்பார்ப்பில் சமூக ஆர்வலர்கள் Dinamalar
தேருக்காக அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் இதே நிலை நீடிக்கும் எதிர்பார்ப்பில் சமூக ஆர்வலர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
06:28

சிவகாசி:சிவகாசி கீழ ரத வீதியில் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். தேரோட்டத்தையொட்டி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதே நிலை தொடர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


சிவகாசி கீழரத வீதி ரோட்டில் இருபுறமும் 100 கடைகள் வரை உள்ளன. இவற்றில் பழக் கடைக்காரர்கள் உள்பட பலர் ரோட்டை ஆக்கிரமித்திருந்தனர். ரோட்டின் இருபுறமும் 6 அடி வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் டூவீலர் உள்ளிட்ட எந்த வாகனமும் எளிதாகச் சென்று வர முடியவில்லை. டூவீலரில் கடைக்கு வருபவர்கள் வேறு வழியின்றி கடைகளின் முன்புறம் டூவீலரை நிறுத்துகின்றனர்.


கீழரத வீதியில் அக்னி விநாயகர், அம்மன், கருப்பசாமி, சிவன், பெருமாள் கோயில்கள் உள்ளன. இங்கு பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். இவர்கள் எளிதாக கோயில் செல்ல முடியவில்லை
ஏற்கனவே ரோட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலையில் டூவீலர்களும் ரோட்டில் நிறுத்தப்படுவதால் மக்கள் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர். இதற்காக கீழரத வீதியில் பெரிய வாகனங்கள் செல்ல வழியில்லாமல் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.


அப்படியிருந்தும் எதிரெதிர் வருகின்ற டூவீலர்களே எளிதில் விலகிச் செல்ல முடியவில்லை. எனவே இந்த ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான போக்குவரத்திற்கு வழி செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.


இந்நிலையில் சமீபத்தில் மாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா நடந்தது. தேர் செல்வதற்
காக கீழரத வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றிய பின்னர் கீழரத வீதியில் போக்குவரத்து எளிதாக இருந்தது. மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடராமல் , இதே நிலை நீடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X