| தமிழ் புத்தாண்டு  சிறப்பு வழிபாடு   Dinamalar
தமிழ் புத்தாண்டு  சிறப்பு வழிபாடு  
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
06:29

மேட்டுப்பாளையம்:தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் உள்ள மாதேஸ்வரர் கோவிலில் காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாதேஸ்வரர் சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. பின், சிறப்பு வழிபாடும், பூஜைகளும் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பூஜைக்கான ஏற்பாடுகளை நந்தவன வெள்ளிங்கிரி ஆண்டவர் பக்தர்கள் திருசபை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.இதே போல், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகேவுள்ள சக்தி விநாயகர் மற்றும் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X