| போதிப்பதே புராண இலக்கியங்களின் நோக்கம்! Dinamalar
போதிப்பதே புராண இலக்கியங்களின் நோக்கம்!
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
06:29

அன்னுார்:அன்னுாரில் ராமாயண தொடர் சொற்பொழிவு நேற்று முன்தினம் துவங்கியது.அன்னுாரில், ராம நவமியை முன்னிட்டு, 11 நாள் ராமாயண தொடர் சொற்பொழிவு, கரிவரத ராஜப்பெருமாள் கோவிலில் துவங்கியது.


புலவர் மகேஸ்வரி சத்குரு, 'தசரதனிடம் மிகுதியா இருப்பது காதலா, பாசமா' என்னும் தலைப்பில் பேசியதாவது:ராமன் காட்டிற்கு சென்றவுடன் புத்திர பாசத்தில், தசரதன் இறந்தான். பாசம், காதல், நட்பு என எதுவும் அளவாக இருப்பதுதான் நல்லது. அளவை மிஞ்சினால் பிரச்னை ஏற்படுத்தும். புராணங்கள் உண்மையானவையா, நடந்தவையா, என்னும் கேள்வி தேவையற்றது.மனித இனத்திற்கு போதிப்பதே புராணங்களின் நோக்கம். தீயவன் மடிவான். நல்லவன் வாழ்வான் என்பது போன்றவை புராணங்களின் மூலம் கற்பிக்கப்படுகிறது.


வால்மீகி சமஸ்கிருதத்தில், ராமாயணம் எழுதி, 2,000 ஆண்டுகளும், கம்பன் தமிழில் எழுதி, 1,000 ஆண்டுகளுக்கு மேலும் ஆகி விட்டது. ஆனாலும், இவை சமுதாயத்தில் இன்றும் நிலைத்து நிற்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தேவராஜ் வரவேற்றார். விழா அமைப்பாளர் திருமூர்த்தி நன்றி தெரிவித்தார். திரளானவர்கள் பங்கேற்றனர். தினமும் மாலை 6:30 முதல் 8:30 மணி வரை, 22 ம் தேதி வரை நடக்கிறது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X