விருதுநகரில் குருத்தோலை ஞாயிறு பவனி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
06:34

விருதுநகர்: விருதுநகரில் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு குருத்தோலை பவனியும், சிறப்பு திருப்பலியும் நடந்தது.


விருதுநகர் துாய இன்னாசியார் ஆலயத்தில் மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜெயராஜ், பாதிரியார் பெனடிக்ட் அம்புரோஸ்ராஜ், துணைப்பாதிரியார் அகஸ்டின் தலைமையில் புனிதப்படுத்தப்பட்ட குருத்தோலைகளை கிறிஸ்தவர்கள் கைகளில் ஏந்தியபடி ஊர்வலம் சென்றனர். ''தாவீதின் குமாரனுக்கு ஓசான்னா, கிறஸ்து ராஜா வாழ்க...! மகிமையின் மன்னவருக்கு ஓசான்னா...!'' என்று கோஷங்கள் எழுப்பினர்.


ஊர்வலம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு நகராட்சி அலுவலகம், ரயில் மேம்பாலம், அருப்புக்கோட்டை ரோடு, எம்.ஜி.ஆர்., சிலை வழியாக மீண்டும் ஆலயத்தை வந்து அடைந்தது. இதை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது.


விருதுநகர் பாண்டியன் நகர் துாய சவேரியார் ஆலயத்தில் பாதிரியார் அருள் பிரான்சிஸ், துணை பாதிரியார் ஜெயராஜ் ஆகியோர் தலைமையில் கிறிஸ்தவர்கள் புனிதப்படுத்தப்பட்ட குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடி ஊர்வலம் சென்றனர். ஊர்வலம் அண்ணாநகர் துாய அந்தோணியார் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ரோசல்பட்டி ஊராட்சி அலுவலகம் வழியாக ஆலயத்தினை வந்தடைந்தது. தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் மறையுரையும் நடந்தது.


விருதுநகர் நிறைவாழ்வு நகர் துாய ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பாதிரியார் தாமஸ் வெனிஸ் தலைமையில் குருத்தோலைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். புது பஸ் ஸ்டாண்ட் அருகே பாலன்நகர் துாய செபஸ்தியார் சிற்றாலயத்தில் இருந்து பாத்திமா நகர், சிவகாசி ஆற்றுப்பாலம் வழியாக ஆலயத்தினை வந்தடைந்தது. தொடர்ந்து சிறப்பு திருப்பலியும், மறையுரையும் நடந்தது.


விருதுநகர் ஆர்.ஆர்.நகர்., துாய வேளாங்கண்ணி அன்னை ஆலயத்தில் பங்குதந்தை பெனடிக்ட் பர்ணபாஸ் அடிகளார் தலைமையில் குருத்தோலை பவனியும், திருப்பலியும் நடந்தது.
அதே போன்று மதுரை ரோட்டில் உள்ள துாய யோவான் ஆலயத்தில் குருத்தோலை பவனி நடந்தது. பாதிரியார் ராஜா ஸ்டாலின் தலைமையில் ஜெபத்துடன் துவங்கியது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் 'ஓசன்னா' என்ற பாடலுடன் ஆலயத்தை நோக்கி பவனி வந்தனர். குருத்தோலை செய்தியை பாதிரியார் பீட்டர் சிங் வழங்கினார்.


ஸ்ரீவில்லிபுத்துார்: கிறிஸ்தவர்களின் புனித வார துவக்கத்தை முன்னிட்டு ஐக்கிய குருத்தோலை பவனி நடந்தது .மறைவட்ட அதிபர் அல்வாராஸ் செபஸ்டின் தலைமை வகித்தார். சி.எஸ்.ஐ., தேவாலய சபைகுரு அந்தோணி துரைராஜ், அற்புதசாமி மனோஜ் மற்றும் ஏராளமான இறைமக்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர்.
பின்னர் இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது..

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X