| நத்தத்தில் சருகு புளி கிலோ ரூ.80 Dinamalar
நத்தத்தில் சருகு புளி கிலோ ரூ.80
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
06:37

நத்தம்:நத்தம் மார்க்கெட்டில் கொட்டை நீக்கிய சருகு புளி கிலோ ரூ. 80 க்கு விற்பனையாகிறது.இப்பகுதியில் தென்னை மற்றும் மாவிற்கு அடுத்தபடியாக புளி அதிக அளவில் சாகுபடியாகிறது. புண்ணபட்டி, உலுப்பகுடி, சிறுகுடி, முளயைூர், சமுத்திராபட்டி, சிறுகுடி, கோபால்பட்டி, கணவாய்பட்டி, வலசு, மாமரத்துபட்டி, ஏழுகொட்டம், வேட்டைக்காரன்புதுார் உள்ளிட்ட பகுதிகளில் புளி அதிகம் விளைகிறது. இப்பகுதியில் விளையும் புளி நத்தம் மற்றும் கோபால்பட்டியில் விற்பனை செய்யப்படுகிறது.வியாபாரிகள் இவற்றை உலர்த்தி, தரம் பிரித்து, விதை நீக்கி கிலோ கணக்கில் பேக்கிங் செய்கின்றனர். மதுரை, திண்டுக்கல், திருச்சி, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு மொத்தமாக அனுப்பி வைக்கின்றனர். கடந்த சில ஆணடுகளாக இப்பகுதியில் போதிய மழையின்றி வறட்சி நிலவி வருகிறது. இதனால் புளி தரம் மற்றும் விளைச்சல் குறைந்துள்ளது. கொட்டைப்புளி தரத்தை ரூ.24 முதல் ரூ.27 வரையும், கொட்டை நீக்கிய சருகு புளி ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது. கிருஷ்ணகிரி மற்றும் கார்நாடகா பகுதிகளில் நல்ல மழைப்பொழிவால் விளைச்சல் அதிகரித்துள்ளது. தமிழக்தத்தில் அதிகம் சப்ளை செய்ய்படுவதால் நத்தம் புளிக்கு எதிர்பார்த்த விலை கிடைக்க வில்லை வியாபாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X