| நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு Dinamalar
நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
06:38

பொள்ளாச்சி:''நீர் மேலாண்மை திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்துள்ளது, இனிமேலும், முக்கியத்துவம் கொடுப்போம்,'' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.பொள்ளாச்சியில், அ.தி.மு.க., வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து, இவர் பேசியதாவது:நம் நாட்டில் உள்ள சாலைகள் எல்லாம், முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகத்துக்கு மட்டும், ஏழு லட்சத்து, 50 ஆயிரம் கோடி ரூபாய், சாலைகளுக்கு ஒதுக்கியுள்ளேன்.


பொள்ளாச்சி - கோவை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக, 5,000ம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.காங்., ஆட்சியில், நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தந்துள்ளது. கோதவாரி - கோலாவரம் அணை கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. கோலாவரத்தில், 1,100 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. உபரியாக கிடைக்கும் தண்ணீரை, எப்படி தமிழகம் உட்பட மாநிலங்களுக்கு கொண்டு செல்வது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.கர்நாடகா - தமிழ்நாடு இடையே, காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்னைக்காக, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது.


இரு மாநிலங்களுக்கு இடையே, 45 டி.எம்.சி., தண்ணீர் பிரச்னையாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.நீர்வழி போக்குவரத்து, திட்டங்களுக்கு, 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் நீர்வழி போக்குவரத்து பயன்படுத்தினால், 45 சதவீதம் போக்குவரத்து செலவு மிச்சமாகும். ஏற்றுமதி பெருகும்,தொழிற்சாலை அதிகரிக்கும், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் முன்னேற்றம் பெருகும். மத்திய அரசு, தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல ஒத்துழைக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.அமைச்சர்கள் வேலுமணி, ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X