| ரித்தீஷ் உடல் அடக்கம் Dinamalar
ரித்தீஷ் உடல் அடக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
06:39

ராமநாதபுரம்:மாரடைப்பால் நேற்று முன்தினம் மரணம் அடைந்த முன்னாள், எம்.பி.,யும், நடிகருமான ரித்தீஷ், 46, உடலுக்கு அமைச்சர்கள், நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.ராமநாதபுரம், சேதுபதி நகரில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், மணிகண்டன் மற்றும் அன்வர்ராஜா, எம்.பி., வேட்பாளர்கள், நயினார் நாகேந்திரன், நவாஸ் கனி, நடிகர்கள் கார்த்தி, ராதாரவி, மனோபாலா, சின்னிஜெயந்த், போண்டா மணி, விஜய் கணேஷ், சுப்புராஜ், ஆர்.கே.சுரேஷ், ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி, ரமணா, சூரி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.பின், சொந்த ஊரான மணக்குடிக்கு, அவரது உடல், நேற்று மாலை எடுத்து செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X