| இரண்டாம் கட்ட மீள் பயிற்சி வகுப்பு Dinamalar
இரண்டாம் கட்ட மீள் பயிற்சி வகுப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
06:41

விருதுநகர்: விருதுநகரில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மீள் பயற்சி வகுப்பு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் நடந்தது.


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 1,881 ஓட்டுச்சாவடிகள் உள்ளது. ஒரு ஓட்டுச்சாவடியில் ஒரு தலைமை அலுவலர், 3 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். இவர்களுக்கு ஓட்டுச்சாவடி மையங்களில் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள், விவிபாட் இயக்கும் முறை, பதிவேடுகள் பராமரிக்கும் முறை உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


இதில் பங்கேற்ற அரசு அலுவலர்களுக்கு தபால் ஓட்டு படிவம் 12, 12-ஏ வழங்கப்பட்டது. பிற மாவட்டங்களில் பணியாற்ற உள்ள விருதுநகர் வாக்காளர்களிடம் இருந்து தபால் மூலமாக படிவம் 12 பெறப்பட்டது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து நியமிக்கப்பட்ட 9,802 தேர்தல் அலுவலர்களில் 8,362 பேர் தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்தனர். நேற்று வரை 2,520 பேர் தபால் ஓட்டை பதிவு செய்தனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X