திருட்டு தடுக்க வீட்டில் 'பொம்மை காவலாளி': உஷாராக இருந்தும் துணிகர கொள்ளை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
06:43

அவிநாசி:தனது வீட்டில் திருட்டு தடுக்க, வெளியூர் செல்லும் முன், வரவேற்பறையில், 'பொம்மை காவலாளி'யை உருவாக்கிவிட்டு சென்றார் வெள்ளி வியாபாரி. ஆனால் திருடர்களோ... அவ்வீட்டில் துணிந்து கொள்ளையடித்து, 'மர்ம குறியீடு' போட்டு, மறைமுக மிரட்டல் விடுத்துச் சென்றனர். இச்சம்பவம், அவிநாசி அருகே நடந்துள்ளது.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே, கருவலுார் - காளிபாளையத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, 61. அனுப்பர்பாளையத்தில், வெள்ளி பொருட்கள் செய்து வருகிறார்.


இவரது மனைவி சுபாராணி,53. குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிட்ட தட்சிணாமூர்த்தி, தனது வீட்டில் உள்ள நகை, பணத்தை பாதுகாக்க, ஒரு 'ஐடியா' செய்தார்.அதாவது, வீட்டிற்குள் வரவேற்பறை கட்டிலில் ஆள் படுத்து துாங்குவது போல, தலையணைகளை நீளவாக்கில் மனித உடல் போன்று வைத்து, தலைப்பகுதியிலும், 'பெட்சீட்' சுருட்டி மனித தலைபோன்று வைத்து, அதன் மீது பெட்சீட் போட்டு மூடி, 'செட்டப்' செய்தார்.தான் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டாலும், ஜன்னல் வழியாக யாராவது பார்த்தால், காவலுக்கு ஒருவர் வீட்டிற்குள் படுத்திருப்பது போல காட்சியளித்து திருடர்களை ஏமாற்றிவிடும் எனக்கருதினார்.


அதன்பின், திட்டமிட்டவாறு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டார்.தனது வீடு பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்பியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜன்னல் உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த இருந்த, 16 சவரன் தங்க நகை, பூஜை அறையில் இருந்த, 15 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. பூஜையறை சுவற்றில் இந்தி எழுத்து போல, 'மர்ம குறி'யீட்டையும் போட்டு திருடர்கள் மிரட்டியிருந்தனர்.


ஒருவரின் அலட்சியமே, திருட்டுக்கு காரணமாக அமையும். ஆனால், வீட்டு உரிமையாளர் உஷாராக செயல்பட்டும் துணிகர திருட்டு நடந்துள்ளது அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.வீட்டில் 'பொம்மை காவலாளி'யை வைத்தது ஏன், என்பது குறித்து தட்சிணாமூர்த்தி கூறியதாவது:நான் உஷாராக செயல்பட்டதற்கும் காரணம் இருக்கிறது. எனது வீட்டில் ஏற்கனவே, 2018 மார்ச்சில் திருட்டு நடந்தது. அன்று, பீரோவில் இருந்த, 26 சவரன் நகை மற்றும் 80 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். ஆனால், போலீசில் புகார் செய்து, 8 சவரன் நகை மட்டுமே கிடைத்தது. அன்றிலிருந்தே எனது வீடு திருடர்களின் இலக்கிற்கு ஆளாகியுள்ளதை உணர்ந்து உஷாராக செயல்பட்டு வந்தேன். அதனால்தான், வெளியூர் செல்லும் போது வீட்டில் ஆள் இருப்பது போன்று செட்டப் செய்திருந்தேன்.


ஆனாலும், திருடர்கள் புகுந்துள்ளனர். ஜன்னலை உடைத்து நுழைந்த திருடர்கள், வரவேற்பறையில் ஆள் இருப்பது போன்ற தோற்றத்தை கண்டு முதலில் நம்பியுள்ளனர். பின்னர், நைசாக சமையல் அறைக்குள் நுழைந்து கத்தியை எடுத்து வந்து, ஆளை எழுப்பி மிரட்ட முயன்றுள்ளனர். அது வெறும் தலையணை என தெரிந்ததும் கத்திகளை அங்கேயே ஸ்டூலில் போட்டுவிட்டனர். பின்னர், பீரோவிலிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துள்ளனர். முன்பு ஒரு முறை திருட்டு நடந்து மீட்கப்பட்ட, 8 பவுன் நகையுடன், மேலும், 10 பவுன் நகை திருட்டுபோய்விட்டது. போலீசார் உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டும்.இவ்வாறு, தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X