மாசில்லா சாத்தூர் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
06:47

''வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்'' என்ற நிலைமாறி, ''ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் '' என்று சொல்லும் நிலைக்கு வந்துவிட்டோம். சாத்துார் நகராட்சியை மாசில்லாமல் மாற்றுவதற்காக பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.


சாக்கடை கலந்த மரிய ஊரணியில் துாய்மையான மழைநீர் தேங்கவும், ஊரணியை துாய்மைப்படுத்தி பூங்கா அமைத்து நடைபயிற்சி மேற்கொள்ளவும் பணிகள் நடந்து வருகிறது. சாலைகள் விரிவாக்கத்திற்காகவும், வாறுகால் வசதிக்காகவும், பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்காகவும் பழமையான மரங்கள் வெட்டப்பட்டன. இவற்றிற்கு மாற்றாக பல இடங்களில்புதியதாக மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வளர்க்கப்படுகிறது.


பிளாஸ்டிக் பயன்பாட்டால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியதால், பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது. எனிலும் சில வியாபாரிகள் பாலிதீன் பைகளை பயன்படுத்தி வருகின்றனர்.


முற்றிலும் தடை செய்ய வேண்டும்.சேதமடைந்த பழைய பூங்காக்களை சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும். பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடித்தால் தான், நிலத்தடிநீர் மட்டம் உயரும் என்று சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தில்லை நகர், சிதம்பரம் நகர், நியூ காலனி பகுதிகளில் வரிசையாக வளர்க்கப்பட்டுள்ள மரங்களால் அப்பகுதி குளுமையாக காணப்படுவது போல, சாத்துாரில் புதியதாக உருவாகி வரும் குடியிருப்பு பகுதிகளிலும் வரிசையாக வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்தால் தான் பசுமையான மாசில்லா சாத்துாரை உருவாக்க முடியும்.

லாபம் முக்கியமில்லை


அரசு பிளாஸ்டிக்கை தடை செய்த நாள் முதல் வாழையிலை தான் பயன்படுத்துகின்றேன். வாழையிலை பயன்படுத்துவதால் வாடிக்கையாளர்களும் சந்தோஷம் அடைகின்றனர். சுற்றுச்சூழலைப் பாதுகாத்து வருங்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். மண்ணில் மக்காமல் நீண்ட காலம் பூமியிலே தங்கி, நிலத்தடிநீரைபாதிக்கூடிய பிளாஸ்டிக்கை அனைவரும்கைவிட வேண்டும்.


வாழை இலை பயன்படுத்தவதால் லாபம் குறைகிறது. எனக்கு லாபம் முக்கியமில்லை. சுற்றுச்சூழல் தான் முக்கியம். சாப்பிடுபவர்கள் மணக்க மணக்க வாழையில் சாப்பிட்டு விட்டு, அந்த இலைகள் கால்நடைகளுக்கு உணவாக மாறும் போது மனசு மகிழச்சியடைகிறது.


-கோபாலகிருஷ்ணன், வடைக் கடை, சாத்துார்.



ஒரு மரம் நடுங்கள்


மெயின் ரோடு அகலப்படுத்தும் போது பல நுாறு ஆண்டுகள் கடந்த நின்ற புளிய மரங்கள், கொடிக்காய்புளி மரங்கள், வேப்பமரங்கள் வெட்டப்பட்டது. இதனால் மெயின் ரோட்டில் தற்போது எங்கும் மரங்களை பார்க்க முடியவில்லை. ரோட்டோரத்தில் கடை வைத்திருப்பவர்கள் கடுமையான கோடை வெயிலில் உட்கார்ந்து வியாபாரம் செய்கின்றனர். ரோட்டோரங்களிலும், வீடுகள் தோறும் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு மரம் வளர்க்க முன் வந்தால் தான், வருங்காலங்களில் கோடையால் ஏற்படும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும். ஒரு மரம் நட்டால் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்ததற்கு சமம்.


-சுந்தரமூர்த்தி, ஆட்டோ டிரைவர்,சாத்துார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X