வங்கிப்பணம் சிக்குது; கட்சிப்பணம் தப்புது! தேர்தல் அதிகாரிகள் விரக்தி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
06:48

'பறக்கும் படையினர் நடத்தும் சோதனைகளில், சிக்குவதெல்லாம், வங்கிப்பணம் மட்டுமே; அரசியல் கட்சியினருக்கு வினியோகிப்பதற்காக வந்த பணம் எதுவும் இதுவரை சிக்கவில்லை' என்கின்றனர், அதிகாரிகள்.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர். ஆங்காங்கே, நிலையான கண்காணிப்பு படையினரும் பணியில் உள்ளனர். வாகன சோதனையும் முழு வீச்சில் நடக்கிறது.


இந்த சோதனைகளின் மூலம், தமிழகத்தில் நேற்று முன்தினம்வரை, 183 கோடி ரூபாய், ஆவணங்கள் இல்லாத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் சிக்கிய பணம் மட்டும், 10 கோடி ரூபாய். இப்படி சிக்கியதெல்லாம், வங்கிப்பணம் மட்டுமே; அரசியல் கட்சியினரின் பணம் இதுவரை எதுவும் சிக்கவில்லை.ஆனால், மாவட்டம் முழுவதும், தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தில் இருக்கிறது. மதுக்கடைகளில் விற்பனை துாள் கிளப்புகிறது. பொதுக்கூட்டம் வருபவர்களுக்கும், ஓட்டு கேட்க வருபவர்களுக்கும், அன்றாடம் பட்டுவாடா நடக்கிறது. அப்படியிருந்தும், அரசியல் கட்சியினர் பணம் எதுவும் பிடிபடாமல் இருப்பது, அதிகாரிகள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.


அரசியல் கட்சியினர், பல்வேறு நுாதன வழிமுறைகளை கையாண்டு, பறக்கும் படையினர் கண்களில் மண்ணைத்துாவி, பணம் கொண்டு செல்கின்றனர். 'யாராவது போட்டுக்கொடுத்தால் ஒழிய, பறக்கும் படையினரால் அவர்களை பிடிக்க முடியாது' என்கின்றனர், அதிகாரிகள்.அதிகாரிகள் சொல்வது என்ன?'ஓரிடத்தில் இருந்து, இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லப்படும் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும் என்பது விதி. அப்படி இல்லையெனில் பணம் பறிமுதல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பணமும் பறிமுதல் செய்யப்படுகிறது.


அப்படியிருந்தும் ஏன் வங்கி அதிகாரிகள் மீண்டும் மீண்டும் இப்படி செய்கின்றனர்' என்று தேர்தல் ஆணையம் கேட்கிறது.'அனைத்து சட்ட நடைமுறைகளும் அறிந்த அவர்களே, இப்படி விதிமுறைகளை மீறி, ஆவணங்கள் இல்லாமல், அதுவும் கோடிக்கணக்கில் பணத்தை அனுப்பி வைக்கலாமா' என்று கேள்வி எழுப்புகின்றனர்,


அதிகாரிகள்.கூட்டத்தில் சிரிப்பலைஆவணங்கள் இல்லாத வங்கிப்பணம் தொடர்ந்து பிடிபடுவதும், பறக்கும் படையினர், ஏ.டி.எம்., மையங்களுக்கு செல்லும் வாகனங்களை வளைத்து வளைத்துப் பிடிப்பதும், மாவட்டத்தில் தொடர்ந்து நடக்கிறது. கோவையில் நடந்த தேர்தல் பணி ஆய்வுக்கூட்டத்தில், ஒரு அதிகாரி, 'சார் இன்று கூட, 68 லட்சம் பணம் பிடிபட்டுள்ளது' என்று கூற, உயர் அதிகாரி, 'ஓ, அப்படியா, வங்கிப்பணம் தானே' என்று கேட்டவுடன், கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. அதிகாரியும், தர்மசங்கடத்துடன், 'ஆமாம் சார்' என்று கூற, 'அதெல்லாம், கச்சிதமா நம்மாளுங்க புடிச்சுடுவாங்க' என்றிருக்கிறார், இன்னொரு அதிகாரி.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X