தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
08:06

சேலம்: தமிழ் புத்தாண்டையொட்டி, சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. அதில், திரளானோர் தரிசனம் செய்தனர்.


சேலம், பெங்களூரு பைபாஸ் சாலையையொட்டியுள்ள, ஐயப்பா ஆசிரமத்தில், விஷூ கனி தரிசனம், சிறப்பு பூஜை நடந்தது. டவுன் ரயில்வே ஸ்டேஷன் சாலையிலுள்ள, ஐயப்பன் பஜனை மண்டலி, அம்மாபேட்டை குருவாயூரப்பன் கோவில், காய்கள், பழங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ராஜகணபதி கோவிலில், காலையில் வெள்ளி கவசம், மாலையில் தங்க கவச சாத்துபடி செய்து, பூஜை நடந்தது. எல்லைப்பிடாரி அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம், தங்க கவச சாத்துப்படி, அஸ்தம்பட்டி மாரியம்மனுக்கு முத்தங்கி அலங்காரம், கோட்டை அழகிரிநாதர், வரதராஜ பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கடைவீதி லட்சுமி நாராயண பெருமாள், ஹம்ச வாகனத்தில் அருள்பாலித்தார். நெத்திமேடு, தண்ணீர் பந்தல் காளியம்மன், தங்க கவச சாத்துபடியில், விஷூ கனி தரிசனம் நடந்தது. உத்தமசோழபுரம் கரபுரநாதர், ஊத்துமலை முருகன், காளிப்பட்டி சென்றாய பெருமாள், இளம்பிள்ளை ஏரிக்கரை மாரியம்மன், ஆத்தூர், வெள்ளை விநாயகர், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், வடசென்னிமலை பாலசுப்ரமணியர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், ஊனத்தூர் அடிபெருமாள், ஓமலூர் பெரியமாரியம்மன், வாழப்பாடி காசிவிஸ்வநாதர், புதுப்பட்டி மாரியம்மன், பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டேஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பமூர்த்திஸ்வரர் உள்பட, மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில், சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது.


1,008 திருவிளக்கு பூஜை: இடைப்பாடி, வெள்ளாண்டிவலசு, காளியம்மன் கோவிலில், நேற்று இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. அதில், மழை பொழிய, மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி, 1,008 விளக்குகளால் சிறப்பு பூஜை நடந்தது. அதில், திரளான பெண்கள், தரிசனம் செய்தனர்.


அய்யனார் மீது சூரிய ஒளி: தலைவாசல், ஆறகளூர், அரசு கால்நடை மருந்தகம் அருகே, பழமையான, அய்யனார் கோவில் உள்ளது. அங்கு, தற்போது சீரமைப்பு பணி நடந்து வருகிறது. நேற்று மாலை, 6:00 மணிக்கு, அய்யனார், அவரது மனைவிகளான, புஷ்பகலா, பூரணி ஆகிய சிலைகள் மீது, சூரிய கதிர்கள் விழுந்தன. அதை ஏராளமானோர் பார்த்து வணங்கினர். சித்திரை முதல் நாளில், அய்யனார் சிலை மீது, சூரிய கதிர்கள் விழுவது வழக்கமாக நடக்கும் நிகழ்வு என, பக்தர்கள் தெரிவித்தனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X