இறந்த மூவரின் உடல் பிரேத பரிசோதனை: அரசு மருத்துவமனையில் ரூ.6,000 லஞ்சம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
08:06

சேலம்: சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த, ஓட்டல் உரிமையாளர் விஜயகுமார், 60. அவரது மனைவி அனுராதா, 50. இவர்களது இளைய மகள் ஆசிகா, 21. கடன் பிரச்னையால், சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, தனியார் ஓட்டலில், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட மூவரின் உடலை, கடந்த, 11ல், அழகாபுரம் போலீசார் மீட்டனர். உயிர் தப்பிய மூத்த மகள் ஆர்த்தி, 22, சிகிச்சைக்கு பின், 13ல், வீடு திரும்பினார். இறந்தவர்களின் உடலை, கொண்டு வர, பிரேத பரிசோதனை செய்ய, அதிக பணம் கேட்டு, நெருக்கடி கொடுத்து, மன உளைச்சலை ஏற்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.


இதுகுறித்து, இறந்தவர்களின் நெருங்கிய உறவினரான, ஓய்வு பெற்ற, எஸ்.ஐ., கேசவன் கூறியதாவது: மூவரின் உடலை, பிரேத பரிசோதனைக்கு கொண்டு வந்த ஆம்புலன்ஸூக்கு, 12 ஆயிரம் ரூபாய் வாடகை கேட்டு, நெருக்கடி கொடுத்தனர். எங்கள் இயலாமையை எடுத்துக்கூறி மன்றாடினோம். கடைசியில், 5,000 ரூபாய் கொடுத்தோம். மருத்துவமனையில் அச்சுறுத்தி, பிரேத பரிசோதனைக்கு, 6,000 ரூபாய் வாங்கிக்கொண்டனர். அதில், மருத்துவருக்கு, 1,500 ரூபாய், காடா துணி, நாடா செலவு உள்ளிட்ட ஊழியர்களுக்கு பங்கு தர வேண்டும் என காரணம் கூறினர். அதற்கு, போலீசார் உடந்தை. அவர்களின் நடவடிக்கை, மன வேதனையை ஏற்படுத்தியது. இறப்பு சான்றாவது, லஞ்சம் வாங்காமல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X