| 'மேக்னசைட் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க நடவடிக்கை' Dinamalar
'மேக்னசைட் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க நடவடிக்கை'
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
08:07

சேலம்: சேலம், லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் பார்த்திபன், ஓமலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்களிடம், ஓட்டு கேட்டு, பிரசாரம் மேற்கொண்டார். குறிப்பாக, ஓமலூர் வடக்கு ஒன்றியம், பேரூர், கருப்பூர், வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி, காமலாபுரம், நாராயணம்பாளையம், கோட்டமேடு, பல்பாக்கி உள்பட, 72 கிராமங்களில், பிரசாரத்தில் ஈடுபட்டார்.


அப்போது, அவர் மக்கள் இடையே பேசியதாவது: ஓமலூரில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க, நடவடிக்கை எடுப்பேன். மேக்னசைட் நிறுவனத்தில் வேலையிழந்த, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, மீண்டும் வேலை கிடைக்க வழிவகை ஏற்படுத்தி தருவேன். விவசாயம் செழிக்க, மேட்டூர் உபரிநீரேற்றும் திட்டத்தை, செயல்பாட்டுக்கு கொண்டு வருவேன். இப்பகுதியில் காய்கறி, பூ, நெல் உள்ளிட்ட பயிர்கள் விளைய, உரிய நடவடிக்கை எடுப்பேன். விவசாய கடன், கல்வி கடன், கிராமப்புற மாணவர்கள் நலனுக்கு, 'நீட்' தேர்வு ரத்து, கரும்பு விவசாயிகள் உற்பத்தி செய்யும் வெல்லம், நாட்டு சர்க்கரைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். ஏழை குடும்பங்களுக்கு, பெண்கள் வங்கி கணக்கில், மாதம், 6,000 ரூபாய் செலுத்தப்படும். தொழிலாளர்கள் நலன் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இவருக்கு ஆதரவாக, மத்திய மாவட்ட செயலாளர், ராஜேந்திரன், உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுப்போட, மக்களிடம் கேட்டுக்கொண்டார். பிரசாரத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசு, தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் குப்புசாமி, துணை செயலாளர் திருநாவுக்கரசு, பொதுக்குழு உறுப்பினர் தங்கராசு, ரமேஷ், கருப்பூர் லோகநாதன், ரவிச்சந்திரன், சுந்தரம், அருண் பிரசன்னா, காங்., மேற்கு மாவட்ட தலைவர் முருகன், வி.சி., வசந்த், கொ.ம.தே.க., லோகநாதன், வாழ்வுரிமை கட்சி மோகன்ராஜ், ராமமூர்த்தி, தொண்டர்கள் பங்கேற்றனர். முன்னதாக, தேக்கம்பட்டியில், அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு, பார்த்திபன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X