நள்ளிரவில் தி.மு.க., பட்டுவாடா: தேர்தல் அதிகாரிகளுக்கு 'டிமிக்கி'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
08:08

ஆத்தூர்: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், தி.மு.க.,வினர், நள்ளிரவில் வீடு, வீடாக சென்று, வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருகின்றனர்.


கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், முன்னாள் அமைச்சர் பொன்முடி மகன் கவுதமசிகாமணி, தி.மு.க., வேட்பாளராக போட்டியிடுகிறார். அ.தி.மு.க., கூட்டணியில், விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ், தே.மு.தி.க., வேட்பாளராக போட்டியிடுகிறார். அ.ம.மு.க.,வில் கோமுகிமணியன் என, இங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., கூட்டணி பலமிகுந்துள்ளதால், ஓட்டுகளை பெற, தி.மு.க., சார்பில், ஒரு வாரமாக, ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு தொகுதிகளில், தி.மு.க.,வினர், நடுநிலை வாக்காளர்கள் என, விபரம் சேகரித்தனர். தி.மு.க., முன்னாள் கவுன்சிலர், வார்டு செயலர், நகர, ஒன்றிய நிர்வாகிகளை அழைத்த, கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள், வாக்காளர்களுக்கு தலா, 300 ரூபாய் வழங்க உத்தரவிட்டனர். இரு நாட்களாக, தேர்தல் அலுவலர்களுக்கு, 'டிமிக்கி' கொடுத்து விட்டு, நள்ளிரவில், தி.மு.க.,வினர் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு, தலா, 300 ரூபாய் கொடுத்து வருகின்றனர்.


குடும்பமே களமிறங்கி பிரசாரம்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி, வேட்பாளராக போட்டியிடும் தன் மகன் கவுதமசிகாமணிக்கு, ஆறு சட்டசபை தொகுதிகளில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தவிர, ஆறு சட்டசபை தொகுதிகளில், பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, அவரது மற்றொரு மகன் அசோக் சிகாமணி, தம்பிகள் தியாகராஜன், ராஜசிகாமணி, கோபி சிகாமணி உள்ளிட்டோர் ஒருபுறம், ஓட்டு சேகரித்து வருகின்றனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X