| அடிப்படை வசதி இல்லை: நிதி ஒதுக்காத எம்.பி., Dinamalar
அடிப்படை வசதி இல்லை: நிதி ஒதுக்காத எம்.பி.,
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
08:09

பனமரத்துப்பட்டி: சேலம் லோக்சபா தொகுதி, பனமரத்துப்பட்டி பேரூராட்சியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 2014, லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வை சேர்ந்த பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். எம்.பி., பதவியேற்ற பின், ஓரிரு முறை அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க, பனமரத்துப்பட்டி வந்தார். ஆனால், மக்களை சந்தித்து, குறைகளை கேட்கவில்லை. மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, ஆண்டுக்கு, 5 கோடி வீதம், 25 கோடி ரூபாய், தொகுதி மேம்பாட்டு நிதி, மத்திய அரசு ஒதுக்குகிறது. ஐந்து ஆண்டுகளில், அந்த நிதியில், பனமரத்துப்பட்டிக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை. அங்கு, இரு ரேஷன் கடைகள், போதிய அடிப்படை வசதியின்றி, 10 ஆண்டுகளுக்கு மேலாக, தனியார் கட்டடத்தில் செயல்படுகிறது. குடிநீர் விரிவாக்க பணிகளுக்கு தேவையான, மேல்நிலை குடிநீர் தொட்டிகள் இல்லை. அங்கன்வாடி மையத்துக்கு சொந்த கட்டடம் இல்லை. பஸ் ஸ்டாண்ட் வசதி ஏற்படுத்தவில்லை. பயணிகளுக்கு இருக்கை மற்றும் குடிநீர் வசதியுடன் நிழற்கூடம் அமைக்கப்படாமல் உள்ளது. பனமரத்துப்பட்டி - மல்லூர் தார்ச்சாலை, மோசமாக சீரழிந்துள்ளதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பள்ளிகள் ஆகியவற்றில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவில்லை. இதுபோன்ற வளர்ச்சி திட்டப்பணிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஐந்து ஆண்டுகள் பதவி வகித்த, அ.தி.மு.க., எம்.பி., ஒன்றுமே செய்யவில்லை என, தி.மு.க.,வினர் வாக்காளர்களிடம் பிரசாரம் செய்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X