| பெண் குளித்தபோது படம்பிடித்தவர் கைது Dinamalar
பெண் குளித்தபோது படம்பிடித்தவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
08:11

ஓமலூர்: பெண் குளிப்பதை, மொபைலில் படம்பிடித்த எலக்ட்ரீஷியனை, போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், தாரமங்கலம், நல்லகிணறு பகுதியைச் சேர்ந்த, 23 வயது பெண், நேற்று காலை, தன் வீட்டில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள், மொபைல்போனில் படம்பிடித்துள்ளனர். இதை கவனித்த பெண், தாரமங்கலம் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, போலீசார் விசாரித்து, அதே தெருவைச் சேர்ந்த, ஓட்டல் உரிமையாளர் மகேந்திரன், 33, பாலு, 35, தெற்கு ரத வீதி எலக்ட்ரீஷியன் சக்திவேல், 35, ஆகியோர் மீது, பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றதாக, போலீசார் வழக்குப்பதிந்தனர். நேற்றிரவு, சக்திவேலை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர். மற்ற இருவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X