| ரூ.11 கோடி பறிமுதல் விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் Dinamalar
ரூ.11 கோடி பறிமுதல் விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
08:14

வேலூர்: வேலூரில், 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடப்பதால், தினமும், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பள்ளிகுப்பத்தில், கடந்த, 1ல், தாமோதரன், பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோர் வீடுகளில், வருமான வரித்துறையினர், பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், 11 கோடியே, 48 லட்சத்து, 51 ஆயிரத்து, 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுக்களில், காட்பாடி, வேலூர் கிளை கனரா வங்கியின் லேபில் இருந்தது. இந்த ரூபாய் நோட்டுக்கள் அனைத்தம், புத்தம் புதிய, 200, 500, 2,000 ஆக இருந்தது. இதனால், கனரா வங்கி மேலாளர் தயாநிதி வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். அவரிடம், இரண்டு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. பூஞ்சாலை சீனிவாசனிடம், நேற்று பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். அதில், 2,000 ரூபாய் நோட்டுக்களை, வேலூர், காட்பாடி கனரா வங்கி கிளையில் கொடுத்து, அதற்கு பதிலாக, புத்தம் புதிய, 200, 500 ரூபாய் நோட்டுக்கள் பெற்றதும், இதற்கு மேலாளர் தயாநிதி, உதவியாக இருந்ததும் தெரிந்தது. இந்த ரூபாய் நோட்டுக்களை போடும் கவர்கள், கோவையில் தயாரிக்கப்பட்டு, வேலூர் மொத்த விற்பனையாளரிடம் இருந்து, ஒரு லட்சம் கவர்கள் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, கவர் தயாரிக்கும் நிறுவனம், வேலூர் விற்பனையாளர் என, 10க்கும் மேற்பட்டவர்களிடம், பறக்கும் படையினர் விசாரித்தனர். பறக்கும் படையினர், வருமான வரித்துறையினர் கொடுக்கும் அறிக்கையின்படி, வங்கி அதிகாரிகள் பலர், சஸ்பெண்ட் ஆக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X