| பள்ளி மாணவர்கள் சென்ற பஸ் தடுப்பு சுவரில் மோதி விபத்து Dinamalar
பள்ளி மாணவர்கள் சென்ற பஸ் தடுப்பு சுவரில் மோதி விபத்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
08:15

திருவண்ணாமலை: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் 67 பேர், திருப்பத்தூரில் இருந்து, தனியார் பஸ் மூலம் திருச்சிக்கு சுற்றுலா சென்றனர். திருவண்ணாமலை அடுத்த செங்கம் சாலையில், நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணி அளவில் சென்றபோது, சாலையோர தடுப்பு சுவரின் மீது மோதியது. இதில் பஸ் மட்டும் சேதமடைந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் காயமின்றி தப்பினர். இவர்களை மீண்டும் சொந்த ஊருக்கு, திருவண்ணாமலை தாலுகா போலீசார் வேறு பஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய பஸ் டிரைவர் சங்கரை தேடி வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X