தமிழ் புத்தாண்டு பிறப்பு: கோவில்களில் சிறப்பு வழிபாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
08:22

ஈரோடு: தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழ் விளம்பி ஆண்டு முடிந்து, விஹாரி புத்தாண்டு சித்திரை, 1 நேற்று பிறந்தது. புத்தாண்டை வரவேற்று தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. ஈரோட்டில் பிரசித்தி பெற்ற கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், மூலவர் மற்றும் வாரணாம்பிகை அம்மன், விநாயகர், சுப்பிரமணியருக்கு அபி ?ஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், அதிகாலை கோ பூஜை, பூதேவி, ஸ்ரீதேவி சமேதரராக அரங்கநாதர் எழுந்தருளி காட்சியளித்தார். பெரியமாரியம்மன் வகையறா கோவில்கள் மற்றும் சூரம்பட்டி மாரியம்மன், சத்திரம் மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும், திண்டல் வேலாயுதசாமி கோவில், கருங்கல்பாளையம் ஐயப்பன் கோவில், கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும், புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பெரியமாரியம்மன் கோவிலில் உற்சவர், கனிகள் அலங்காரத்திலும், கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் தங்க கவசம், மாநகராட்சி ராஜகணபதி சந்தன காப்பு அலங்காரம், முனிசிபல் காலனி சக்தி விநாயகர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

* பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் அந்தியூர், பத்ரகாளியம்மன் கோவில், அம்மாபேட்டை, ஆப்பக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டராப்பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் வழிபாடு நடந்தது.


* புன்செய்புளியம்பட்டி, அண்ணாமலையார், கரிவரதராஜ பெருமாள், காமாட்சியம்மன், ஊத்துக்குளி அம்மன், பிளேக் மாரியம்மன், ஐயப்பன் கோவில்களில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஊத்துக்குளி அம்மனுக்கு சந்தனகாப்பு, சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு கனிகள் படைக்கப்பட்டு அபிஷேக ஆராதனை நடந்தது. பிளேக் மாரியம்மன் வெள்ளிக்கவசத்திலும், மாரியம்மன் தங்கக்காப்பு அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


* சென்னிமலை முருகன் கோவிவில் நேற்றுஅதிகாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு முதலில் கோமாதா பூஜை நடந்தது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் தொடர்ந்து பஸ்கள் இயக்கப்பட்டன.


* மொடக்குறிச்சி யூனியன், நஞ்சை ஊத்துக்குளி பஞ்சாயத்து, காங்கயம் பாளையம் காவிரி ஆற்றின் நடுவே உள்ள ஸ்ரீநட்டாற்றீஸ்வரர் கோவிலில், நேற்று லட்சார்ச்சனை நிறைவு விழா நடந்தது. மேலும், 108 சங்காபி?ஷகம் நடந்தது.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X