| குழந்தை பெற்றெடுத்த பெண் தொற்று நோயால் சாவு? Dinamalar
குழந்தை பெற்றெடுத்த பெண் தொற்று நோயால் சாவு?
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
08:23

ஈரோடு: ஈரோடு, சாஸ்திரி நகர் அம்மன் நகரை சேர்ந்த சங்கர், 41. இவர் மனைவி தையல் நாயகி, 38. கடந்த, 9ல் ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்ந்தார். 10ல், அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை நன்றாக உடல் நலத்துடன் உள்ளது. இந்நிலையில், நேற்று காலை, 9:30 மணியளவில் தையல் நாயகி இறந்தார். அவருக்கு நுரையீரல் தொற்று இருந்ததாக கூறப்பட்டது. ஈரோடு சுகாதார துறை துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறுகையில், ''சில நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படை, இறந்த பெண் ஏற்கனவே பெற்று வந்த சிகிச்சை குறித்து ஆய்வு செய்து தான் கூற முடியும்,'' என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X