| தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் Dinamalar
தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
08:25

கோபி: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கொடிவேரி தடுப்பணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று ஆனந்தமாக குளித்தனர்.


சித்திரை மாதம் பிறப்பு மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில், நேற்று அதிகாலை, 4:00 மணி முதல், ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோபி, சத்தியமங்கலம், திருப்பூர் ஆகிய பகுதி கோவில்களுக்கு, தீர்த்தம் எடுக்க கலச குடத்துடன் வந்த, ஏராளமான பக்தர்கள் கொடிவேரி தடுப்பணையில் குவிந்தனர். தடுப்பணையில் இருந்து வினாடிக்கு, 450 கன அடி தண்ணீர் வெளியேறியது. இந்த தண்ணீரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர். மேலும், லோக்சபா தேர்தல் சமயம் என்பதால், கடத்தூர் மற்றும் பங்களாப்புதூர் போலீசார், அதுசார்ந்த பணிக்கு முடுக்கி விடப்பட்டிருந்தனர். இதனால், தடுப்பணையில் போலீசார் நேற்று பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. இதனால், ஆபத்தை உணராமல், தடுப்பணையின் மேல் பகுதி மற்றும் மணல் போக்கி அருகே ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்தனர். நேற்று ஒரே நாளில், 7,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.


இதுகுறித்து, ஈரோடு எஸ்.பி., சக்திகணேஷ் கூறுகையில், ''தேர்தல் மற்றும் பாதுகாப்பு பணிக்காக, 504 போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். கொடிவேரி தடுப்பணையில், பாதுகாப்பு கருதி, உடனே போலீசார் பணியமர்த்தப்படுவர்,'' என்றார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X