| கோடையில் கைகொடுத்த தடுப்பணைகள்: நிலத்தடி நீர் மட்டம் உயர்வதாக விளக்கம் Dinamalar
கோடையில் கைகொடுத்த தடுப்பணைகள்: நிலத்தடி நீர் மட்டம் உயர்வதாக விளக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
08:28

ஈரோடு: வெண்டிபாளையம் தடுப்பணையில் தேக்கி வைத்துள்ள தண்ணீரின் பயனாக, கரையோர கிணறுகளில் நிலத்தடி நீர் குறையவில்லை. உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


மேட்டூர் அணையில் தற்போது, 54.47 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கர்நாடக மாநிலம், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் வறட்சி நிலவுவதால், நீர் வரத்து, 19 கன அடியாக சரிந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ஆற்றில், 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கு இது போதுமானதாக இல்லை என்றாலும், ஏற்கனவே தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் தற்போது கைகொடுத்து வருகிறது.


இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த மார்ச்சில், மேட்டூர் அணையில், 8,000 கன அடி தண்ணீர் திறகக்கப்பட்டது. நீர் வரத்து இல்லாத காரணத்தால், அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்தது. அதனால், 1,000 கனஅடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி படுகையில் உள்ள மாவட்டங்களின் மொத்த குடிநீர் தேவையை இது பூர்த்தி செய்ய போதாது. இருந்தானாம், ஏற்கனவே, 8,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட சமயத்தில், செக்கானூர், அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை, ஊராட்சிக்கோட்டை, குதிரைக்கல் மேடு, பி.பெ. அக்ரஹாரம், வெண்டிபாளையம் தடுப்பணைகளில், ஒவ்வொன்றிலும், ஒரு டி.எம்.சி., அளவுக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் இப்போது கைகொடுத்து வருகிறது. தற்போது கோடை வெயில் சுட்டெரித்து நிலையிலும், காவிரி கரையோரங்களில் உள்ள விவசாய கிணறுகள், போர்வெல்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் வற்றவில்லை. குறிப்பாக, ஈரோடு வெண்டிபாளையம் தடுப்பணையில், தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர், கருங்கங்கல்பாளையம் ராகவேந்திரர் கோவில் வரை பரந்து விரிந்து நிற்கிறது. ஆற்றில் வரும் தண்ணீரை காட்டிலும், இந்த தண்ணீர் தான் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இப்போதைக்கு ஈரோட்டில் தண்ணீர் பிரச்னை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X