| அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி Dinamalar
அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
09:22

காட்சி பொருளான தண்ணீர் தொட்டி: தர்மபுரி அடுத்த, மிட்டாரெட்டிஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட கோம்பேரியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன், பஞ்.,நிர்வாகம் சார்பில், சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், மின்மோட்டார் பழுதால், இதில் தண்ணீர் வருவதில்லை. இத்தொட்டி காட்சிப் பொருளானது. இதை சீரமைத்து மீண்டும் தண்ணீர் வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சுகாதார வளாகம் திறக்கப்படுமா? ஜக்கசமுத்திரம் பஞ்.,க்கு உட்பட்ட வெள்ளிசந்தையில், கடந்த, ஆறு ஆண்டுகளுக்கு முன், ஆண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இன்று வரை திறந்து பயன்பாட்டுக்கு விடப்படவில்லை. இதனால், ஆண்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகள் கழிக்க வேண்டிய சூழ்நிலையுள்ளது. எனவே, இப்பகுதி மக்களின் நலன்கருதி, இதை திறந்து பயன்பாடுக்கு கொண்டு வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X