| தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை Dinamalar
தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
09:23

தர்மபுரி: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலை விநாயகர் கோவிலில், நேற்று காலை, 6:00 மணிக்கு, சுவாமிக்கு, பல்வேறு திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தன. சுவாமிக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது.


தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில், நெசவாளர் காலனி மல்லிகார்ஜீனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், செந்தில்நகர் சித்தி விநாயகர் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜை மற்றும் அலங்காரங்கள் நடந்தன.


பொங்கல் வைத்து கொண்டாட்டம்: தர்மபுரி மாவட்டத்தில் வத்தல்மலையில் உள்ள வத்தல்மலை, சின்னாங்காடு, ஒன்றிக்காடு, பெரியூர், பால் சிலம்பு உட்பட, பல்வேறு மலைக்கிராம மக்கள், தமிழ் புத்தாண்டான நேற்று, தங்கள் பகுதிகளில் உள்ள மாரியம்மன், விநாயகர், முருகன், சிவன் கோவில்களில் இருந்து சுவாமிகளை, ஒவ்வொரு வீடுகளுக்கும் அழைத்துச்சென்று வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, கிராம மக்கள் ஒன்றிணைந்து தங்களது பகுதிகளில் உள்ள கோவில்கள் முன், பொங்கல் வைத்து தமிழ் புத்தாண்டை கொண்டாடினர்.


* பெரிய மாரியம்மன் கோவில், சந்திரமவுலீஸ்வரர் கோவில், சித்தி விநாயகர் கோவில், காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில், கூசுமலை முனியப்பன் கோவில் ஆகிய கோவில்களில் அதிகாலை சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தன. இதேபோல், பர்கூர் சாந்தகாளியம்மன் கோவில், ஐய்யப்பன் கோவில், வரட்டனப்பள்ளி லட்சுமி நரசிம்மசுவாமி, ஊத்தங்கரை காசி விஸ்வநாதர் மற்றும் காவேரிப்பட்டணம், மத்தூர், வேப்பனஹள்ளி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதேபோல், ஓசூரில் உள்ள சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், ராமர் கோவில், வேல்முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. மக்கள் இனிப்புகளை வழங்கி தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். பர்கூர் அடுத்த குண்டியால் நத்தம் காளியம்மன் கோவிலில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் ஆறாம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X